மாமனாருக்கு மட்டும் காரு! மருமகனுக்கு இதானா? தனுஷுக்கு கலாநிதிமாறன் கொடுத்த கிஃப்ட்

by Rohini |
dhanuhs
X

dhanuhs

Actor Dhanush: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற திரைப்படம் ராயன். இந்த படத்தை தனுஷே இயக்கி அதில் அவர் நடித்திருக்கும் செய்திருக்கிறார். அவருடன் இணைந்து ராயன் திரைப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

வன்முறையை தூண்டும் விதமாக இந்த படம் இருப்பதாக பல பேர் கருத்து தெரிவித்தனர். ஆனால் அதையும் மீறி படம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வந்தது. வசூலிலும் ஓரளவு சாதனை படைத்தது. தனுஷிற்கு இந்த படம் 50ஆவது திரைப்படமாக அமைந்திருக்கிறது. அவர் இயக்கும் இரண்டாவது திரைப்படமும் கூட.

இதையும் படிங்க: த.வெ.க கட்சி கொடியில் யானை சின்னத்திற்கு எதிர்ப்பு!.. ஆரம்பமே அமர்க்களம்தான்!…

ஏற்கனவே பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் தனுஷ். அடுத்ததாக ராயன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சமீபகாலமாக தனுஷின் நடிப்பிலும் நடவடிக்கைகளிலும் ஒரு நேர்த்தியான பக்குவம் இருப்பதாக தெரிகிறது. ஒரு கைதேர்ந்த நடிகராக திகழ்ந்து வருகிறார் தனுஷ். பக்குவப்பட்ட நடிப்பு என்று சொல்வார்கள். அது தனுஷிடம் நிறையவே இருக்கிறது.

எந்த கதாபாத்திரமானாலும் அதை நல்ல முறையில் நடித்து மக்களிடையே ஓரளவு நிலையான இடத்தையும் பிடித்து விடுகிறார் தனுஷ். அதுவும் அசுரன் திரைப்படத்திற்கு பிறகு அவருடைய நடிப்பில் நிறையவே மாற்றங்கள் தெரிகின்றன.

இதையும் படிங்க: பா.ரஞ்சித்தின் அடுத்த வில்லன் ஆர்யாவே.. ஆனா ஹீரோ யாரு தெரியுமா?

அதற்கு முன்பு வரை ஒரு லவ்வர் பாயாக விளையாட்டுத்தனமான ஒரு பிள்ளையாகவே நடித்து வந்த தனுஷ் அசுரன் திரைப்படத்திற்கு பிறகு தான் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார் .

dhanush

dhanush

ராயன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடைந்துள்ளதால் அந்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் தனுஷை அழைத்து பாராட்டி இரண்டு காசோலைகளை கொடுத்திருக்கும் செய்தி இப்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் மற்றும் இயக்குனர் என்ற வகையில் இரண்டு காசோலைகள் அவரிடம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதை பார்த்த நெட்டிசன்கள் மாமனாருக்கு மட்டும் சொகுசு காரு. மருமகனுக்கு வெறும் காசோலைதானா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க; நிகழ்ச்சி முடிந்ததும் விஜய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஜோசியர் இப்படி சொல்லிட்டாரே!…

Next Story