ஒரு உப்புமாவிற்காக படப்பிடிப்பை நிறுத்திய கமல்.. அடடே இதுக்கு பின்னால் இப்படியொரு காரணம் இருக்கா?..
தமிழ் சினிமாவில் உன்னத நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவரின் திறமை, பல்நோக்கு பார்வை, பகுத்தறியும் திறன் என அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு இருக்கின்றன. இளம் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.
60 வருடங்களுக்கும் மேலாக தனது திரைப்பயணத்தை வெற்றிகரமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் கமல். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை எஸ்.பி.முத்துராமன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவர் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவில் கமல் செய்த அட்ராஸிட்டி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது என்று கூறினார்.
இதையும் படிங்க : ஷூட்டிங் ஸ்பாட்டில் கொந்தளித்த தனுஷ்??… சொந்தக்காசில் டிக்கெட் போட்டு சென்னைக்கு திரும்பினாரா?? என்னவா இருக்கும்!!
அந்த படத்தில் ஒரு காட்சியில் சாவித்ரி ஆசிரியையாக இருப்பார். அப்போது அவர் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருப்பார். வெளியில் கமல் பசியை போக்குவதற்காக தண்ணீர் பம்பில் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பார். அதை பார்த்த சாவித்ரி வெளியே வந்து ஏன் சாப்பிடலயா ? என்று கேட்பார்.
அதற்கு கமல் அனாதை இல்லத்தில் காலை இரவு மட்டும் தான் சாப்பாடு போடுவார்கள், மதியம் கிடையாது. அந்த நேரத்தில் நான் இங்கு வந்து தண்ணீர் குடித்து பசியை போக்கிவிடுவேன் என்று கூறுவார். உடனே சாவித்ரி தான் வைத்திருந்த உப்புமாவை எடுத்து சாப்பிடு என்று சொல்லுவார். அதற்கு கமல் வேண்டாம் என்று சொல்ல திரும்ப திரும்ப கமல் மறுத்து விடுவார்.
ஆனால் காட்சிப் படி உப்புமாவை சாப்பிட வேண்டும். ஆனால் கமல் மறுக்க செட்டில் இருந்த அனைவரும் சொல்லியும் சாப்பிட மறுத்து விடுவார். உடனே பீம்சிங் எஸ்.பி. முத்துராமனிடம் போய் அவனிடம் என்ன என்று கேளு, ஏன் சாப்பிட மறுக்கிறான் என்று கேள் என்று சொல்ல எஸ்.பி,முத்துராமன் தனியாக அழைத்து கமலிடம் கேட்டாராம்.
அதற்கு கமல் ஆமாம், மாந்தோப்பிற்கு அழைத்துப் போய் அங்குள்ள மாம்பழங்களுக்கு பதிலாக பொம்மைகளை தொங்கவிட்டிருந்தீர்கள், இங்கு வந்து பார்த்தால் வீடுக்கு பதிலாக சேலைகளை தொங்கவிட்டு செட் போட்டு வைத்துள்ளீர்கள், இப்பொழுது உப்புமாவை காட்டி சாப்பிடு என்றால் எப்படி சாப்பிட முடியும்? அதுவும் ஒருவேளை மண்ணாக இருந்தால் ? அதனால் தான் வேண்டாம் என்று சொன்னாராம். உடனே முத்துராமன் கமல் முன்னாடி சாப்பிட்டு அதன் பின்னரே கமல் அந்த காட்சியில் நடித்தாராம். அந்த வயதிலயும் பகுத்தறிந்து பேசிய கமலை பார்த்து செட்டில் இருந்த அனைவரும் பாராட்டினார்கள் என்று முத்துராமன் கூறினார்.