களவாணி படத்தில் நடிச்சவங்க அட்ஜெஸ்மெண்ட் செஞ்சாங்க… பகீர் கிளப்பும் சக நடிகை!..

Kalavani: தமிழ் சினிமாவில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற களவாணி படத்தில் நடித்த பிரபலங்கள் குறித்து அப்படத்தில் நடித்த நடிகை பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சினிமாத்துறையில் பெண்களுக்கு எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத விஷயமாக இருப்பது அட்ஜெஸ்மெண்ட். அந்த வகையில் பெண்கள் மாடலிங் ஆசையில் வந்துவிட்டாலே அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் வரும். அப்படி வரும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை தான் இது.
இதில் சிலர் சினிமா வாய்ப்பு வருகிறதே என்ற ரீதியில் ஒப்புக்கொண்டு இணங்கி போய்விடுவார்கள். ஆனால் வேறு சிலரோ அதற்கு எதிராக நின்று சினிமாவில் வளர முடியாமல் பாதியிலேயே ஒதுங்கிவிடுவார்கள். ஒரு சில நடிகைகள் தான் இந்த பிரச்னையை வெட்ட வெளிச்சமாக்குவார்கள்.
சமீபத்தில் கூட சின்னத்திரை நடிகையின் ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அது ஏஐ என்று சொல்லப்பட்டாலும் சினிமா வாய்ப்புக்கு ஆடிஷன் செய்கிறேன் என்ற பெயரில் அவரை அரைகுறை ஆடையுடன் எதிர் முனையில் இருந்த குரல் செய்ய வைத்தது பலரையும் பாதித்தது.

இது அந்த நடிகைக்கு தற்போது புகழை பெற்று கொடுத்துள்ளாது. 25 ஆயிரத்தில் இருந்த அவரின் சமூக வலைத்தள கணக்குகள் 2 லட்சத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. இதை பார்க்கும் பலர் திறமை இல்லாமல் இப்படி சிலரை வளர்த்து விடுவது அபத்தம் எனவும் கடுப்படித்து வருகின்றனர்.
அந்தவகையில் களவாணி திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷன். இவர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், என்னுடன் களவாணியில் நடித்தவர்கள் எல்லாம் இப்போ பிஸியா இருக்காங்க. அந்த படத்தில் சும்மா ரிச் கேர்ளா நடிச்சவங்க கூட இப்போ காரில் வந்து இறங்குகிறார்கள்.
ஆனால் நாங்க இன்னும் நடந்து தான் போகிறோம். அவர்களை தப்பு சொல்லவில்லை. அவங்க சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி மாறிக்கிறாங்க. நாங்க மாற முடியலை எனக் குறிப்பிட்டுள்ளார். அட்ஜெஸ்மெண்ட்டை சொல்லவில்லை என்றாலும் இவர் பேச்சை கேட்ட ரசிகர்கள் இவர் அப்படிதான் சொல்லுகிறார் என கமெண்ட் தட்டி வருகின்றனர்.