முதன் முறையாக அப்பா மகன் ஒரே திரையில்! வெளியான ‘சூர்யா 44’ பட அப்டேட்
Surya 44: யாரும் எதிர்பாராத ஒரு கூட்டணி சூர்யா 44 படத்தின் மூலம் உருவாகி இருக்கிறது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் தான் சூர்யா 44. திடீரென இந்த கூட்டணி பற்றி சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதும் ரசிகர்களுக்கு ஒரே அதிர்ச்சி.
எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென சூர்யாவை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்று வெளியானதும் ரசிகர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஏனெனில் கார்த்திக் சுப்பராஜ் படங்களை பொருத்தவரைக்கும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லரான திரைப்படமாக இருக்கும்.
இதையும் படிங்க: 50 மணி நேரம் ரஜினி புகழ் பாடிய ஆர்.ஜே.விக்னேஷ்!.. மனம் உருகி வாய்ஸ் நோட் போட்ட சூப்பர்ஸ்டார்.
அதே வேளையில் ஒரு ஆக்சன் படமாகவும் இருக்கும். அவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வரிசையில் சூர்யாவுடன் இணைவது சூர்யா ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது.
இந்த நிலையில் சூர்யா 44 படத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார் என ஒரு தகவல் வெளியானது .சூர்யா 44 படப்பிடிப்பில் காளிதாஸ் ஜெயராம் இருந்த ஒரு புகைப்படம் ரசிகர் ஒருவரால் வெளியிடப்பட்டு பெரும் வைரலானது.அதன் பிறகு அந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார் என உறுதியாக தெரிந்தது.
இதையும் படிங்க: அண்ணாத்த படத்தில் நயன் இல்ல.. நாங்கதான் மெயின்னா இருந்தோம்.. குஷ்பு சொன்ன ஆச்சரிய தகவல்
இந்த படத்தில் ஒரு கருப்பு நிற ஷர்ட் அணிந்து மிகவும் ஸ்டைலிஷ் ஆக இருந்தார் காளிதாஸ் ஜெயராம். இதற்கிடையில் ஏற்கனவே இந்த படத்தில் பிரபல மூத்த நடிகர் ஜெயராம் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதிலிருந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதன்முதலாக அப்பாவும் மகனும் சேர்ந்து நடிக்கும் திரைப்படமாக இந்த சூர்யா 44 திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இவர்கள் இருவரும் ஏற்கனவே புத்தம் புது காலை என்ற ஒரு வெப் சீரிஸில் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் முதன்முதலாக சூர்யா 44 திரைப்படத்தின் மூலம் தான் ஜெயராமன் காளிதாஸ் ஜெயராமும் இணைந்து நடிக்கிறார்கள்.
இதையும் படிங்க: தீபாவளி ரேஸில் விடாமுயற்சி? தயாரிப்பாளர் போட்ட பதிவு.. கலக்கத்தில் மற்ற படங்கள்
அதனால் இதுவே ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சூர்யாவின் நடிப்பில் கங்குவா திரைப்படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்திருந்த நிலையில் அந்த தேதியில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியாகுவதால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது.
அது எப்பொழுது ரிலீஸ் என கூடிய சீக்கிரம் வெளியாகும். கங்குவா திரைப்படத்தை பொருத்தவரைக்கும் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாரான திரைப்படம். பழமொழிகளில் ரிலீஸாக இருக்கின்றது. அந்த படம் வெளியானால் தமிழ் சினிமாவை ஒரு அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் சொல்லப்படுகிறது.