பில் கட்டாததால் சிறைபிடிக்கப்பட்ட இளம் நடிகர்…. நடந்தது என்ன??

Published on: November 20, 2021
jayaram-kalidass
---Advertisement---

வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவர் ஹேட்டலில் பில் கட்டாமல் எஸ்கேப்பாக நினைத்ததால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் தான் அந்த இளம் நடிகர்.

சினிமாவில் வாரிசு நடிகர்கள் களமிறங்குவது ஒன்றும் புதிதல்ல. அந்த வரிசையில் மீன் குழம்பும் மண் பானையும் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ். இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ள காளிதாஸ் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

kalidass

இந்நிலையில் காளிதாஸ் தற்போது தமிழில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினருடன் மூணாறு சென்ற காளிதாஸ் அங்குள்ள ஹோட்டல் ஒன்றி தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் காளிதாஸ் மற்றும் படக்குழுவினர் ஹோட்டல் அறை மற்றும் ரெஸ்டாரண்ட்டுக்கான தொகையை செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற நினைத்ததாக கூறப்படுகிறது. அதனால் ஹோட்டல் நிர்வாகத்தினர் அவர்களை சிறை வைத்துள்ளனர். பின்னர் போலீசார் வந்து விசாரணை நடத்தி பிரச்சனையை முடித்து வைத்துள்ளனர்.

பிரபல நடிகரின் மகனும் வளர்ந்து வரும் இளம் நடிகருமான காளிதாஸ் ஹோட்டல் பில் கட்டாததால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் மலையாள திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment