சலார் வசூல் சாதனையை முறியடித்த கல்கி... 7 நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?..

பாகுபலி திரைப்படம் 650 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வரலாற்று சாதனையை அப்போதே படைத்தது. அதன் பின்னர் பாகுபலி இரண்டாம் திரைப்படம் 1800 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய பெஞ்ச் மார்க்கை உருவாக்கியது.

பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பிறகு பிரபாஸுக்கு இந்திய அளவில் மார்க்கெட் அதிகரித்தாலும் ஹிந்தியில் அவர் நடித்த சாஹோ திரைப்படம் செம பிளாப் போனது. சாஹோ திரைப்படத்தில் தொடர்ந்து தெலுங்கில் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த ராதே ஷ்யாம் திரைப்படமும் தோல்வி படமாக மாறியது.

இதையும் படிங்க: ஒரு படத்துக்கு 4 இசையமைப்பாளர்களா? விஜய் நடித்த படத்தின் பாடல்கள் ஹிட்டான ரகசியம் இதுதான்

மீண்டும் ஹிந்தி இயக்குனர் ஓம் ராவத் இயக்கிய ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான அந்த திரைப்படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 500 கோடி வசூல் மட்டுமே எடுத்து ஃபிளாப் ஆனது.

சரிவில் இருந்த பிரபாஸுக்கு சலார் திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெற்றி படமாக மாறியது. 700 கோடி ரூபாய் வசூலை சலார் திரைப்படம் பெட்ரோல் நிலையில் 7 நாட்களிலேயே அந்த படத்தில் வசூல் சாதனையை கல்கி 2898 ஏடி திரைப்படம் முறியடித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னை வந்தாலும் சூர்யா வீட்டில் தங்காத ஜோதிகா!.. அப்படி என்ன பஞ்சாயத்து?!…

6 நாட்களில் 700 கோடி ரூபாய் வசூலை கல்கி 2898 ஏடி திரைப்படம் பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டது. இந்நிலையில், புதன்கிழமை நேற்று மேலும் 40 கோடி வசூல் செய்து 740 கோடி ரூபாய் வசூலுடன் சலார் படத்தின் லைஃப் டைம் ரெக்கார்டை கல்கி 2898 ஏடி முறியடித்துள்ளது.

இந்த வார இறுதிக்குள் 1000 கோடி ரூபாய் வசூலை நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி நடித்த கல்கி திரைப்படம் அள்ளி அசால்டு பண்ணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பிரபாஸோட அடுத்த படம் இதுதான்!.. மத்த படங்களை தூக்கி கிடப்புல போட்ட கல்கி ஹீரோ!.. ஷூட்டிங் எப்போ?

 

Related Articles

Next Story