2வது நாள் எகிறும்னு பார்த்தா இப்படி ஆகிடுச்சே கல்கி!.. பாக்ஸ் ஆபிஸில் சரிவு..

Published on: June 29, 2024
---Advertisement---

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையிலும் இரண்டாம் நாள் வசூல் அதிரடியாக சரிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபாஸ் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆர்வமும் படத்தை முதல் நாளிலேயே தியேட்டருக்குச் சென்று பார்த்து விட வேண்டும் என இருந்த நிலையில், உலகம் முழுவதும் கல்கி திரைப்படம் முதல் நாளில் 191 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் பிரபாஸ் படமாக வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தில் மெயின் ஹீரோவே அமிதாப் பச்சன் என தெரிந்த நிலையில், பிரபாஸ் ரசிகர்களே அப்செட் ஆகிவிட்டனர்.

இதையும் படிங்க: கமலுக்கு டாட்டா சொன்ன சிம்பு!. எஸ்.டி.ஆர் 48க்கு மாறும் இயக்குனர்!.. அட தயாரிப்பாளர் அவரா?!…

கடைசி கிளைமாக்ஸில் மட்டுமே பிரபாஸ் கர்ணனாக மாறும் இடத்தில் தான் ஹீரோவாகவே தெரிகிறார் என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், பிரபாஸுக்கு எதிரான ட்ரோல்கள் அதிகமாக பரவி வருகிறது. மேலும், கர்ணனை விட அர்ஜுனன் தான் சிறந்தவர் என்றும் ஃபேன்ஸ் ஃபைட்டும் ஆரம்பித்து விட்டது.

கல்கி 2898 ஏடி திரைப்படம் டெக்னிக்கலாக ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டாலும் பல ஹாலிவுட் படங்களில் காப்பி அப்பட்டமாக தெரிவதாக கடுமையான விமர்சனங்களும் அந்த படத்துக்கு எதிராக குவிந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று இந்தியாவில் ஐம்பது சதவீதம் அளவுக்கு வசூல் முதல் நாளை விட குறைந்து விட்டதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஷங்கர் பூட்டி வைத்த ரகசியம்!.. இந்தியன் 3ல் இப்படியொரு ரோல்!.. திடீரென உளறித்தள்ளிய கமல்?

வெறும் 50 கோடி மட்டுமே இந்திய அளவில் கல்கி திரைப்படம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளில் இந்திய அளவில் 115 கோடி வசூலை கல்கி திரைப்படம் பெற்றதாக கூறப்படும் நிலையில் உலக அளவில் 191 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. வெள்ளிக்கிழமை வேறு எந்த பெரிய படமும் வராத நிலையிலும் கல்கி படத்தின் வசூல் குறைந்து விட்ட நிலையில், சனி மற்றும் ஞாயிறு வசூல் அதிகரிக்குமா அல்லது படிப்படியாக குறைந்து விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிரபாஸ் நடித்த சலார் திரைப்படத்திற்கும் இதே நிலைமை நீடித்ததால் தான் மொத்தமாக 700 கோடி ரூபாய் தாண்ட முடியாமல் தவித்தது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை கூட அளவில் என்றால் பெரிய அளவில் லாபம் வராது என்கின்றனர். மொத்தமாக உலகளவில் 280 கோடி வசூலை கல்கி திரைப்படம் இதுவரை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ வசூல் 300 கோடி என அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிங்க: நான் யாருனு தெரியும்ல? என்கிட்ட வச்சுக்கிட்டா அவ்ளோதான்.. அடாவடி பண்ணும் விக்னேஷ் சிவன்

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.