பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாபச்சன் மற்றும் தீபிகா படுகோன் லீடு ரோலில் நடித்துள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்துக்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக முதல் காட்சியை தொடர்ந்து மதியம் மற்றும் மாலை நேர காட்சிகள் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் ஆனது.
மகாநடி படத்தை தெலுங்கில் இயக்கிய நாக் அஸ்வின் பிரபாஸை வைத்து கல்கி எனும் பிரம்மாண்ட காவியத்தை படைத்துள்ளார். ஹாலிவுட் தரத்துக்கு விஷுவல்ஸ் உள்ள நிலையில் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை படத்திற்கான டிக்கெட் புக்கிங் அனைத்து இடங்களிலும் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டன என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: என்னது இது யுவன் போட்ட பாட்டே இல்லையா? அதான் இந்த லட்சணத்துல இருக்கா? பீதியை கிளப்பிய தகவல்
600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கேமியோ ரோலில் ராஜமௌலி, ராம்கோபால் வர்மா, துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் மற்றும் விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடைசிவரை முடிந்தவரை கேமியோ கதாபாத்திரங்கள் குறித்த சஸ்பென்ஸை இயக்குநர் கட்டிக் காப்பாற்றி வந்த நிலையில் படம் வெளியானதும் ஒவ்வொரு நடிகர்களின் ரசிகர்களும் அவர்களின் காட்சிகளையே வெளியிட்டு ஸ்பாய்லர் செய்து விட்டனர்.
இந்தியா முழுவதும் இந்த திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 115 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், ஹோம் கிரவுண்ட்டான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 75 கோடி வசூலை இந்த படம் ஈட்டியுள்ளது என்றும் இந்தியில் 24 கோடி ரூபாய், தமிழ்நாட்டில் 5 கோடி ரூபாய், கர்நாடகா, கேரளாவில் என ஒட்டுமொத்தமாக இந்த தொகை வந்திருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: குஷ்பூ இட்லினு பேர் வர்றதுக்கு காரணமே இந்த நடிகர்தானாம்.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த குஷ்பூ
மேலும், ஓவர்சீஸில் 65 கோடி வசூல் முதல் நாளில் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக கல்கி திரைப்படம் முதல் நாளில் 180 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நாளில் 220 கோடி வசூல் பெற்று முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாகுபலி 2 திரைப்படம் 206 கோடி வசூலுடன் உள்ளது. தற்போது 3வது இடத்தில் கல்கி திரைப்படத்தின் வசூல் உள்ளதாக கூறுகின்றனர். சலார் திரைப்படம் முதல் நாளில் 175 கோடி ரூபாய் வசூல் அள்ளியது.
இதையும் படிங்க: பொண்டாட்டி திட்டுவா வீட்டுக்கு போனும்! ‘கங்குவா’ பட தாமதமாவதற்கு ஜோதிகாதான் காரணமா?
