கமல் ரசிகர்களுக்கு திடீரென செக் வைத்த பிரபாஸ் ரசிகர்கள்!.. புளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்டை பாருங்க!
பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியான கல்கி திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெற்றி அடைய வைக்கவில்லை என்றால் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை ஆந்திராவில் வெற்றி பெற விடமாட்டோம் என பிரபாஸ் ரசிகர்கள் பொங்கி வருவதாக புளூ சட்டை மாறன் போட்டுள்ள மீம் வைரலாகி வருகிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் என பான் இந்தியா நடிகர்கள் நடித்து வரும் நிலையில் அனைத்து இடங்களிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறும் என படக்குழு எதிர்பார்த்து வந்தது.
இதையும் படிங்க: ‘வி.ஐ.பி-2’வில் முதலில் நடிக்கவிருந்தது இந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலமா?.. அவமானப்பட்டு வந்ததுதான் மிச்சம்
ஆனால், படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை தவிர்த்து மற்ற இடங்களில் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லாததை அறிந்து கொண்ட தெலுங்கு ரசிகர்கள் தமிழ்நாட்டிலும் இந்த படத்தை கைவிட்டால் அதன் பின்னர் தமிழில் வெளியாகும் பெரிய படங்களை பார்க்க மாட்டோம் என பிளாக் மெயில் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
ஒரு படம் நன்றாக இருந்தால் அது மற்ற இடங்களிலும் ஓடும். மஞ்சுமெல் பாய்ஸை பார்த்ததுபோல மொழியை கடந்து ரசிகர்கள் நிச்சயம் அந்த படத்தை கொண்டாடுவார்கள்.
இதையும் படிங்க: வெறியேத்துறதே உனக்கு வேலையா போச்சி!. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி…
ஆனால் அதை விட்டுவிட்டு பல கோடிக்கு படம் எடுத்து விட்டோம் பார்த்தே தீர வேண்டும் என மற்ற மாநில ரசிகர்களை வலியுறுத்துவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை எனக் கூறுகின்றனர்.
இந்தியன் 2 படத்துக்கு தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை, இதில் நீங்க தெலுங்கில் ஓட விட மாட்டீங்களா என்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவாஜி படத்தை ரீமேக் செய்து கையை சுட்டுக்கொண்ட துயரம்… அட தயாரிப்பாளர் அந்த நடிகரா?..