பாகுபலி, ஆர்ஆர்ஆர், ஜவான் வரிசையில் சாதனை படைத்த கல்கி! இவ்ளோ கோடி போட்டு எடுத்து இது இல்லைனா எப்படி?

Kalki 2898 AD: நாக் அஸ்வின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கல்கி 2898 .இந்த படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் நடித்திருந்தனர் .படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. நேற்று திங்கள் கிழமை என்பதால் படம் ரிலீஸ் ஆகி ஐந்தாவது நாளான நேற்று வரைக்கும் மொத்தமாக கல்கி திரைப்படம் இந்திய அளவில் 343 கோடி வசூலை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

நார்த் அமெரிக்காவில் 11 மில்லியன் டாலர் அளவில் வசூல் பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது .அதிலும் குறிப்பாக தெலுங்கு மற்றும் ஹிந்தி இவைகளில் தான் கல்கி திரைப்படம் பெருமளவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. கல்கி படத்தை பொறுத்த வரைக்கும் தமிழில் ஒரு ஆவரேஜான வசூல் தான் என்றாலும் படக்குழுவின் மொத்த எதிர்பார்ப்புமே தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தான்.

இதையும் படிங்க: நான் எப்படிப்பட்டவன்? சிக்குவேனா? வடிவேலுவுக்கும் பயில்வான் ரெங்கநாதனுக்கும் இப்படி ஒரு பிரச்சினை இருக்கா?

இந்த நிலையில் இதற்கு முன்பு வெளியான பிரம்மாண்ட திரைப்படங்கள் ஆன பாகுபலி 2 ,ஜவான் மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற படங்களின் முதல் நான்கு நாள் வசூலை கருத்தில் கொண்டு இந்த படங்களுக்குப் பிறகு அந்த வரிசையில் கல்கி திரைப்படமும் நான்காவது இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது .

அதாவது பாகுபலி 2 முதல் 4 நாளில் இந்திய அளவில் 384 கோடி வசூலை பெற்றது. அதுபோல ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் முதல் ஐந்து நாளில் 380 கோடி வரை வசூலிக்க ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் முதல் நான்கு நாளில் 373 கோடியை வசூல் செய்திருக்கிறது. அந்த வரிசையில் இந்த மூன்று படங்களுக்கு பிறகு கல்கி திரைப்படம் முதல் ஐந்து நாட்களில் 343 கோடி வரை வசூலித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: கமலுக்கும் இருக்கும் பெருந்தன்மை ரஜினிக்கு இல்லை!.. இந்த விஷயத்துல கிரேட் உலக நாயகன்தான்!..

இதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கும் நாக் அஸ்வின் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியை ஆரம்பித்திருக்கிறார். இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை புத்திசாலித்தனமாக முதல் பாகத்தில் ஒரு ட்விஸ்ட்டோடு முடித்திருக்கிறார் இயக்குனர்.அதனால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் வேறொரு யுகத்திற்கு கொண்டு செல்லும் என்று சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story