ஏம்மா உனக்கு என்னமா குறைச்சல்...? சைட காட்டி ஷாக் அடிக்க வைக்கும் ஹீரோ பட நடிகை....

by Rohini |   ( Updated:2022-04-04 09:57:26  )
kalyani_main_cine
X

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இப்படத்தில் அறிமுகமனார் கல்யாணி பிரியதர்ஷன். சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். புத்தம் புது காலை என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார்.

kalyani1_cine

ஆனால், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு நல்ல வேடம் அமைந்திருப்பதாகவும், இப்பட வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளதாகவும் டிவிட்டரில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

kalyani2_cine

மேலும், இப்படத்திற்கு பின் அவர் பல படங்களில் நடிக்க வாய்ப்பிருப்பதகவும் கூறப்படுகிறது. தமிழில் பேசப்படும் நடிகையாக வலம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

kalyani3_cine

இது தவிர மாடலிங், போட்டோசூட் நடத்தி பெருமளவு ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் இவர் தற்போது சேலையில் ஒரு விதமா சைடு போஸ் காட்டி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Next Story