More
Categories: Cinema News latest news

அதுக்கு மயங்காதவர் உண்டா!..‘இந்தியன்’படத்தில் கமல் நடித்தது இப்படித்தான்!..

கமல்ஹாசன் நடிப்பில் மறக்க முடியாத படங்கள் பல இருந்தாலும் அதில் ‘இந்தியன்’ திரைப்படம் அவரின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாகும். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார்.

1996ம் ஆண்டு இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடி சிறை சென்ற ஒரு சுதந்திர போராட்ட தியாகின் மகன் லஞ்சம் வாங்கி வாழ்க்கை நடத்துபவராக இருக்கிறார். லஞ்சம் வாங்குபவர்களை தேடி கொலை செய்து வரும் அந்த தியாகி இறுதியில் தனது மகனையும் கொன்றுவிட்டு தப்பி செல்கிறார் என்பதுதான் இந்தியன் படத்தின் கதை.

Advertising
Advertising

1977ம் ஆண்டு வெளி வந்த ‘நாம் பிறந்த மண்’ என்கிற இந்தியன் படத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. அப்படத்தில் நாட்டை தேச துரோகிகளிடம் காட்டிக் கொடுக்கும் தனது தம்பி கமல்ஹாசனை அவரின் அண்ணன் சிவாஜி கணேசன் சுட்டுக்கொல்வதுதான் படத்தின் அடி நாதம்.

இந்த கதையில் லஞ்சம், ஊழல், வர்மக்கலை ஆகியவற்றை கலந்து வேறு மாதிரி திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர் ஷங்கர். இதற்கு அப்படத்தின் வசனகர்த்தா எழுத்தாளர் சுஜாதாவும் உதவி செய்திருப்பார்.

இந்த கதையில் நடிக்க ஷங்கர் கமல்ஹாசனை அணுகிய போது, கதையை கேட்ட கமல்ஹாசன், இது நான் ஏற்கனவே நடித்த ‘நாம் பிறந்த மண்’படத்தின் கதை போலவே இருக்கிறது என நடிக்க மறுத்தார். ஷங்கர் முதன் முதலாக இயக்கிய ஜென்டில்மேன் கதையில் நடிக்க முதலில் ஷங்கர் அணுகியது கமலைத்தான். இது ஏற்கனவே தான் நடித்த ‘குரு’படத்தின் கதை போலவே இருக்கிறது எனக்கூறி நடிக்க மறுத்துவிட்டார் கமல்.

தற்போது இந்தியன் படத்தின் அவர் நடிக்க மறுக்க, இந்த தகவலை இந்தியன் பட தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திடம் ஷங்கர் கூற, கமலின் முழு சம்பளத்தையும் பணமாக சில பேக்குகளில் வைத்து நேராக கமலின் அலுவலகம் சென்றுள்ளர. கமலிடம் ‘ இது நீங்கள் வாங்கும் முழு சம்பளம்’, இந்தியன் படத்தில் நடியுங்கள் என ரத்னம் கூற வாயடைத்து போய் ஒப்புக்கொண்டாராம் கமல்ஹாசன்..

பொதுவாக ஒரு படத்தில் ஒரு ஹீரோ நடிக்கிறார் என்றால் சம்பளத்தில் பாதி அல்லது 25 சதவீதத்தை அட்வான்ஸாக கொடுப்பார்கள். ஆனால், அப்போது கமல் வாங்கிய முழு சம்பளத்தையும் நடிக்கும் முன்பே ஏ.எம்.ரத்னம் கொடுத்ததால் கமல் சம்மதம் கூறிவிட்டாராம்.

பணத்துக்கு மயங்காத நடிகர்கள் உண்டா என்ன?…

Published by
சிவா

Recent Posts