இரவு 12 மணிக்கு கதவை தட்டிய தயாரிப்பாளர்!.. உடனே நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!. அட அந்த படமா?!..

Published on: January 24, 2024
kamal
---Advertisement---

Kamal: சினிமா என்பது ரசிகர்களுக்குதான் பொழுதுபோக்கு. ஆனால், அதை சார்ந்த தொழிலை செய்பவர்களுக்கு அது வியாபாரம் மட்டுமே. அதாவது இவ்வளவு பணம் போட்டு இவ்வளவு லாபம் எடுக்க வேண்டும் என்பதுதான் கணக்கு. ஒரு தயாரிப்பாளர் இப்படித்தான் திட்டமிட்டுவார். அதையும் குறையும் சொல்ல முடியாது.

ஏனெனில் சினிமா என்பது கோடிகளை முதலீடு செய்யும் ஒரு தொழில். அதனால்தான் யார் இயக்குனர், யார் நடிகர்.. இவரை வைத்து படமெடுத்தால் எவ்வளவு லாபம் வரும் என திட்டமிட்டு ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தை எடுக்கிறார். அப்படி திட்டமிட்டு எடுக்கும் படங்களே தோல்வி அடைவதும் உண்டு. அதுதான் சினிமா.

இதையும் படிங்க: ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி – கமல் நடிக்கவிருந்த படம்!.. டிராப் ஆனதுக்கு காரணம் இதுதான்!..

5 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். திரைத்துறையில் பல அனுபவங்களை பெற்றவர். சினிமாவில் பல வேடங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். ரசிகர்களால் உலக நாயகன் எனவும் அழைக்கப்பட்டு வருகிறார். விக்ரம் மெகா ஹிட்டுக்கு பின் நான்கைந்து படங்களில் நடிக்கவிருக்கிறார்.

kamal
kamal

கமல்ஹாசன் தான் நடிக்கும் படங்களை எப்படி திட்டமிட்டு தேர்ந்தெடுப்பார் என்பதை அவரை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். நன்றாக யோசித்து, தேவைப்பட்டால் சிலரிடம் விவாதித்து படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை முடிவு செய்வார். ஆனால், 10 நிமிடத்தில் அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட கதையைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

இதையும் படிங்க: அன்பறிவுடன் சும்மாவா வச்சாரு கூட்டணி? பின்னணியில் இப்படி ஒரு சமாச்சாரத்துடன் களமிறங்கும் கமல்

கமலுக்கு இயக்குனர் ஐ.வி.சசி நல்ல நண்பராக இருந்தவர். ஒருநாள் இரவு 12 மணிக்கு கமலின் வீட்டுக்கதவை தட்டியிருக்கிறார். அவருடன் ஒரு தயாரிப்பாளரும் வந்திருந்தார். அவர்களை உள்ளே அழைத்து கமல் பேசியதும் ‘இவரின் தயாரிப்பில் நீங்கள் ஒரு படம் நடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பு நாளைக்கு காலையில் பேப்பரில் வெளிவரவேண்டும்’ என சசி சொல்ல கமலும் உடனே ஒப்புக்கொண்டார்.

guru

அப்படி கமல் நடித்து வெளியான படம்தான் குரு. 1980ம் வருடம் ஜூலை மாதம் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து 100 நாட்கள் ஓடியது. சினிமாவில் சில சமயம் இப்படி உடனே முடிவெடுத்து ஒரு படம் உருவாகும் என்பதற்கு குரு படத்தை உதாரணமாக சொல்லலாம்.

இதையும் படிங்க: கமல் ரத்த வாந்தி எடுத்தான்.. பாரதிராஜா சொன்ன அதிர்ச்சி சம்பவம்…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.