Connect with us
banner

கமலுக்கு மகனாக விஜய்சேதுபதியா…? அதிரவைத்த அதிரடியான அந்த படத்தின் இரண்டாம் பாகம் அப்டேட்….

kamal_main_cine

Cinema News

கமலுக்கு மகனாக விஜய்சேதுபதியா…? அதிரவைத்த அதிரடியான அந்த படத்தின் இரண்டாம் பாகம் அப்டேட்….

தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்கள் இப்போது டிரெண்டாகி வருகின்றது. பெரும்பாலும் இந்த மல்டி ஸ்டார் படங்களில் தயங்காமல் நடிக்க கூடிய தமிழ் சினிமா நடிகர் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அவர் சினிமா துறையில் வளர்ந்து வந்ததுக்கு அப்புறம விக்ரம் வேதா படத்தில் தான் இந்த முயற்சியை கையில் எடுத்தார்.

kamal1_cine

அடுத்து விஜயுடன் இணைந்து மாஸ்டர், ரஜினியுடன் பேட்ட போன்ற படங்களில் காணப்பட்ட இவரை மக்கள் அதிகளவு வரவேற்க தொடங்கினர். மீண்டும் இது போன்று படங்கள் பண்ண மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தார்.

kamal2_cine

ஹீரோவாக நடித்து கிடைத்த அங்கீகாரத்தை விட மல்டி ஸ்டார் படங்களில் நடித்து கிடைத்த அங்கீகாரம் தான் அவர்க்கு அதிகமாக வந்தது. இந்த நிலையில் 1992 ஆம் ஆண்டு சிவாஜி , கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக தெரிகிறது.

kamal3_cine

அதில் கிராமத்து தலைவனாக சிவாஜி அவருக்கும் மகனாக கமல் நடித்திருப்பர். அதே வகையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு மகனாக விஜய் சேதுபதி நடிப்பதாக தெரிகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top