ஒரே நேரத்தில் அஞ்சா!… தாங்குவாரா உலக நாயகன்… ஜெட் வேகத்தில் வேலை செய்வதுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

Published on: January 13, 2024
---Advertisement---

Kamalhassan: கோலிவுட் ஹீரோக்களுக்கு என்ன தான் ஆச்சு? விஜயும், அஜித்தும் ஒரே படத்துடன் போராட அதற்கு முந்தைய தலைமுறையான ரஜினியும், கமலும் ஜெட் ஸ்பீடில் ஓடிக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் கமல் தன்னுடைய கேரியரில் முதல்முறையாக ஒரு ஆச்சரிய முடிவை எடுத்து இருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் கண்டிப்பாக இந்த வருடம் ரிலீஸ் ஆகிவிடும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் அதன் மூன்றாம் பாகத்தின் வேலைகளும் பரபரப்பாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதையும் படிங்க: நான் அப்படி நடிப்பேன்னு யாரும் நம்பல!.. ஒருத்தர தவிர!.. விஜயகாந்த் சொன்னது யாரை தெரியுமா?…

இதே நேரத்தில் சமீபத்தில் கமல், மணிரத்னத்துடன் இணைந்தார். அப்படத்துக்கு தக் லைஃப் எனப் பெயர் வைக்கப்பட்டு அட்டகாசமான ஒரு இண்ட்ரோ வீடியோவும் ரிலீஸாகி வைரலானது. அப்படத்தின் படக்குழு அறிவிக்கப்பட்டாலும் இதுவரை அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை. அதை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் அறிவிப்புடன் நிற்கிறது.

இப்படத்திற்கு சில வேலைகள் தொடங்கினாலும் கதையில் இன்னும் கமலுக்கு திருப்தி இல்லை. ஹெச் வினோத் விலகுகிறார் என பல தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் தற்போது கமலின் 237வது படத்தினை சண்டை இயக்குனர்களான அன்பறிவு இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது! தரமாக தயாராகி வரும் கலக்கல் காமெடி படத்தின் இரண்டாம் பாகம்

ஏற்கனவே இவர்கள் அனிருத் மற்றும் லோகேஷை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்படி பார்க்கும் போது இவர்கள் கமலை வைத்து இயக்க இருப்பது இரண்டாவது படமாக இருக்கலாம். மேலும் இந்த லிஸ்ட்டில் கமல், பிரபாஸின் கல்கி படத்தில் வில்லனாகவும் நடித்துவருகிறார்.

கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 5 படம் வரை கமல் நடிப்பது இதுவே முதல்முறையாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்குவதை ஒட்டி தன்னுடைய கட்சி பணிக்காக முன்கூட்டியே இந்த ஐடியாவை செய்து இருக்கலாம் என்று சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.