அட்வைஸ் பண்ணது தப்பா...? கமலை தரக்குறைவாக பேசிய சின்னத்திரை பிரபலம்...!
கடந்த இரண்டு வருடங்களாகவே தாடி பாலாஜி மற்றும் நித்யாவின் விவகாரம் சூடுபிடித்துக் கொண்டே இருக்கிறது. இடையில் சேர்ந்து பின் பிரிந்து இவர்களது பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளியே அமையாமல் போய்க் கொண்டே இருக்கிறது.
ஒரு புறம் பாலாஜி மீடியா கோர்ட் மைக் னு சுத்திக்கிட்டே இருக்க நித்யாவோ அமைதியாக இருந்தார். அவரை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது பத்திரிக்கையாளரையே வந்து பாருனு பேசுனார். நீங்க ஏன் மீடியா கிட்ட பேசல னு கேட்டதற்கு ஏன் உங்களுக்கு கன்டன்ட் கிடைக்கலயானு பதிலுக்கு கேட்டார்.
எனினும் அவர் விடாம கேட்க மீடியா கிட்ட வந்தால் எனக்கு தீர்வு கிடைக்காது, நான் கோர்ட்ல போட்டுருக்கேன் அங்க பாத்துக்கிறேன் என்று சொன்னார். மேலும் அந்த பத்திரிக்கையாளர் கமல் சார் உங்களையும் பாலாஜியையும் கூப்பிட்டு அட்வைஸ் பண்ணாராமே என்று கேட்டார்.
இதையும் படிங்கள் : கண்ணாடி புடவையில் பளபளன்னு மேனி காட்டி மயக்கிய கீர்த்தி சுரேஷ்!
அதற்கு நித்யா அந்த ஆள போக சொல்லுங்க, அவர மாதிரி ஒரு வொர்ஸ்ட் கேரக்டரை இதுவரை நான் பாத்ததே இல்ல என்று கமலை பற்றி தரக்குறைவாக பேசினார். எப்படி இருந்தாலும் இது கமல் காதுக்கு போச்சுனா விளைவு என்னவாக இருக்கும்னு பொறுத்திருந்து தான் பாக்கனும்.