உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த கமல் திரைப்படம்!..ஆனால் ‘விக்ரம்’ இல்ல!..இதுக்கு தான ஆசைப்பட்டாரு உலகநாயகன்?..
உலக அளவில் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்ற ஹாலிவுட் திரைப்படம் ‘கில் பில்’. இரண்டு பாகங்களாக வெளிவந்த கில் பில் படத்திற்கு உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த படத்தை எடுத்தவர் பிரபலமான இயக்குனர் குவென்டின் டாரன்டினோ.
இவர் ஏற்கெனவே 'pulp fiction', 'once upon a time hollywood' போன்ற தரமான பல படங்களை இயக்கியிருக்கிறார். கில் பில் படத்தில் ஒரு பெண் தான் பட்ட துயரங்களையும் அந்த துயரங்களுக்கு காரணமாக இருந்த தன் முன்னாள் காதலனையும் அதற்கு உடந்தையாக இருந்த தன் அலுவலக ஊழியரையும் கொலை செய்யும் கதையாக அமைந்த படம் தான் இந்த திரைப்படம்.
இந்த படத்திற்கு குவென்டின் டாரன்டினோவிற்கு முன்னுதாரணமாக இருந்தது நம் உலகநாயகன் கமல் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் குவென்டின் டாரன்டினோ தெரிவித்தார், இந்த படத்திற்கு ஒரு உந்துதலாக இருந்த படம் கமலின் அபய் என்ற ஹிந்தி படமாம். அது வேறு ஒன்றும் இல்லை. தமிழில் ஆளவந்தான் என்ற படம் தான் ஹிந்தியில் அபய் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க : “டான் படம் பார்த்து சிரிப்பே வரல”… ப்ளு சட்டை மாறனாக மாறிய உதயநிதி… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது!!
பயங்கரமான வன்முறை காட்சிகளை சித்தரிக்க ஜப்பானிய மாங்கா அனிமேஷன் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தான் எடுக்க முடியும். ஆனால் இதை முதன் முதலில் 2001 இல் கமல்ஹாசன் வன்முறையை சித்தரிக்க ஆளவந்தான் திரைப்படத்தில் பயன்படுத்தினார். இதே அனிமேஷனை தான் கில் பில் படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் குவண்டின். மேலும் இதை பற்றி ஏற்கெனவே ஏராளமான அமெரிக்க பத்திரிக்கைகளில் ‘இந்த அனிமேஷனை நான் ஒரு இந்திய திரைப்படத்தை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்’ என்று ஆளவந்தான் படம் பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். இந்த செய்தியை அறிந்த கமல் ஒரு பிரபல அமெரிக்க இயக்குனர் தன்னை இந்த அளவுக்கு பாராட்டியதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என்று கூறினார்.
மேலும் கமல் அடிக்கடி கூறும்போது நம் மற்ற மொழி சினிமாக்களை பற்றி வியப்பாக பேசிக்கொண்டு வருகிறோம். ஆனால் மற்ற மொழி சினிமாக்காரர்கள் தமிழ் சினிமாவை பற்றி பெருமையாக பேசவேண்டும். அதற்கு நாம் கடினமாக உழைக்கவேண்டும் என கூறிக்க்கொண்டே இருப்பார். அது கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறி வருகிறது.