கமல் எப்பவோ இத ட்ரை பண்ணிட்டாரு! தங்கலான் பற்றி பிரபலம் சொன்ன தகவல்

Published on: August 15, 2024
vikram kamal
---Advertisement---

Thangalan: விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் இன்று உலகெங்கிலும் ரிலீஸாகியிருக்கிறது தங்கலான் திரைப்படம். படத்தில் விக்ரமுடன் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி என பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் போஸ்டர், பாடல்கள் வெளியான நிலையில் அதில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களும் எந்தளவு மெனக்கிட்டார்கள் என்பதை பார்க்க முடிந்தது.

அதனால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தங்கலான் படத்தை பற்றி அவருடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார். பா.ரஞ்சித்தை பொறுத்தவரைக்கும் சமூக அரசியல், ஜாதிய அரசியலை பேசக் கூடியவர். ஆனால் இந்தப் படத்தில் அவருடைய அரசியலை டீ-கோடிங் செய்து காண்பித்திருக்கிறார்.

இதையும் படிங்க: மூணுல ஒன்னு.. வெளியேறிய எழில்… உளறாதீங்க மனோஜ்… சிக்க போகும் கதிர்!..

ஆனால் நில அரசியலை தங்கத்தின் பின்புலமாக வைத்து பேசியிருக்கிறார் பா.ரஞ்சித். மற்ற படங்களின் அரசியல் வாடை இந்தப் படத்தில் மிகக் குறைவு. மேலும் படத்தில் ஆர்ட்டிஸ்ட்டை வேலை வாங்கிய விதம் மிக அற்புதமாக இருக்கிறது. விக்ரமில் தொடங்கி சின்ன சின்ன குழந்தைகளின் நடிப்பு வரை அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தை ஆஸ்காருக்கு கொண்டு செல்லும் முயற்சியில் லைவ் சவுண்ட் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த லைவ் சவுண்டை கமல் எப்பவோ பயன்படுத்தி முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இந்தப் படத்தில் லைவ் சவுண்ட் பயன்படுத்தியதால் ஆங்காங்கே சில வசனங்கள் புரியவில்லை.

இதையும் படிங்க: தனுஷ் சொன்ன அந்த ரகசியம்… ட்ரோல் ஆக சிவகார்த்திகேயனின் பேச்சு தான் காரணமா?

முக்கியமாக தங்கலான் படக் கதை வட ஆற்காடு மாவட்டத்தில் அமையும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டையலாக் வருகிறது. அதாவது பிரிட்டிஷ்காரர் ஒருவர் வட ஆற்காடு ஜில்லாவிலும் கோலார் ஜில்லாவிலும் தங்கம் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அதனால் நீங்கள் எல்லாம் தங்கம் எடுக்க வேண்டும் என விக்ரம் சார்ந்த குழுவிடம் கூறுவார்.

இதில் நார்த் தமிழில் பேசக் கூடியதாக வசனங்கள் இடம்பெற்றிருக்கும். அதை விக்ரம் சரியாக பேசுவார். ஆனால் சில நேரங்களில் புரியவில்லை. மேலும் ஒரு கட்டத்திற்கு மேலாக படம் டாக்குமெண்ட்ரியாகவே தெரிகிறது. முதல் பாதி சுவாரஸ்யமாக செல்கிறது. கடைசியில் விக்ரமை வைத்து பா.ரஞ்சித் ஒரு ட்விஸ்டை கொடுத்திருப்பார். அது யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க:இளையராஜாவோட பயோபிக் சூட்டிங் பரபர அப்டேட்… இயக்குனர் சொன்ன அந்தத் தகவல்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.