என் கூட ஒரே ஒரு படத்துல நடிக்கணும்.. அப்பவே சிம்புவிடம் சொன்ன கமல்

kamal_simbu
Kamal Simbu: கமல் சிம்பு காம்போவில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் ஜூன் ஐந்தாம் தேதி ரிலீசாக இருக்கின்றது. அதனால் இப்போதிலிருந்து படக்குழு படத்தின் புரமோஷனை ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தி தொடர்ந்து கமல் சிம்பு திரிஷா மணிரத்னம் என அடுத்தடுத்து படத்தைப் பற்றி பல விஷயங்களை பேட்டிகளில் பகிர்ந்து வருகின்றனர்.
இதில் முதல் முயற்சியாக ஒரு படத்திற்கான புரமோஷனை ஆஸ்திரேலியாவில் நடத்துவதாக கமல் தெரிவித்திருக்கிறாராம். இதுவரை சிங்கப்பூர் துபாய் மலேசியா என நம் அண்டையை நாடுகளில் மட்டுமே ப்ரமோஷன் நடத்திய இந்த சினிமா துறையில் முதன்முறையாக ஒரு தமிழ் படத்தின் ப்ரோமோஷனை ஆஸ்திரேலியா வரைக்கும் கொண்டு செல்கிறார் என்றால் அதை கமலின் புது முயற்சி என்று சொல்லலாம்.
படத்தில் கமல் ஒரு பக்கம் இருந்தாலும் சிம்புவுக்கு இந்த படத்தில் முக்கியமான ஸ்கோப் இருப்பதாக அனைவருமே கூறி வருகிறார்கள். கமலை பொருத்தவரைக்கும் வளரும் நடிகர்களை எப்பொழுதுமே ஊக்குவிக்கும் ஒரு கலைஞராகத்தான் இதுவரை இருந்து வருகிறார் .ஏனெனில் 200 படங்களுக்கு மேல் நடித்து விட்ட கமல் இனி அடுத்த தலைமுறையினர்தான் இந்த தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையை உடையவர் .

அதனால் தான் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட சிம்புவை எந்த அளவுக்கு முன்னிலைப்படுத்தினார் என்பதை நம்மால் பார்க்க முடிந்தது. அந்த வகையில் நான் நடிக்கிற படத்தில் நீங்கள் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என சிம்புவிடம் ஒரு மேடையில் கமல் சொன்ன வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது. ஒரு விருது விழா வழங்கும் மேடையில் சிம்பு மற்றும் கமல் இருவரும் ஒன்றாக நிற்க கமலிடம் சிம்பு உங்களுடைய படங்களில் இந்த படத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கும் படம் எது என்ற ஒரு கேள்வியை கேட்டிருப்பார்.
அதற்கு கமல் நீங்கள் நிறைய படங்கள் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால் என்னுடைய ஒரு படத்திலாவது நீங்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என சொல்லி இருப்பார். இதை கேட்டதும் சிம்பு கமலை பார்த்து கையெடுத்து கும்பிட்டவாரு தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருப்பார். இது எப்பவவோ நடந்த ஒரு விழா. அப்போ கமல் சொன்னது தக் லைஃப் படத்தில் இப்போது அது நடந்து இருக்கிறது. அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.