தப்பு செஞ்சா கமல் மழுப்புறது இது முதல் முறையில்லையாம்… இதுக்கு முன்னாடி ஒரு தப்பும் செஞ்சிருக்காராம்..!

Kamalhassan: தமிழ் சினிமாவின் ஆஸ்கார் நாயகன் எனப் பலராலும் பாராட்டை பெற்ற கமல்ஹாசன் கூட இதை செய்வாரா என நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு சம்பவமும் நடந்து இருக்கிறது. அதை தன்னுடைய பேட்டி ஒன்றில் பிரபல திரை விமர்சகர் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே கமல் ஒரு ரெட் கார்டை கொடுத்து விட்டு அதை மழுப்பும் விதமாக என்னென்னமோ சொல்லி சமாளித்து விட்டார். இருந்தும் அவரை விடாமல் ரசிகர்கள் துரத்தி அடித்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர் இப்படி தப்பை செய்து விட்டு அதை மழுப்புவது முதல் முறை இல்லையாம்.

இதையும் படிங்க: மாயா, பூர்ணிமாவை கிழித்து தொங்கவிட்ட சுரேஷ் தாத்தா!.. அட பின்னாடி தட்டோட நிக்கிறது யாருன்னு பாருங்க!..

இதற்கு முன்னரே ஒரு பேட்டியில் இதுப்போல் ஒன்றை செய்து விட்டு அதை கேட்டதற்கு மழுப்பி இருக்கிறார். இதுகுறித்து பிஸ்மி அளித்திருக்கும் பேட்டியில் இருந்து, முதலில் எல்லாம் கமலை நெருங்குவதும் என்னவோ கஷ்டமான விஷயமாக இருந்தது. பேட்டி கூட கொடுப்பதற்கே யோசிப்பார்.

ஆனால் அவரின் பிஆர்ஓவாக நிகில் முருகன் பதிவியேற்றவுடன் தான் அவர் நிறைய பேட்டி கொடுக்கவே தொடங்கினார். அப்படி ஒருமுறை என்னுடன் சேர்த்து பத்து செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுப்பதாக சொல்லி இருந்தார். நானும் அப்போ ஆர்வத்தில் அங்கு சென்று இருந்தேன். பல மூத்த பத்திரிக்கையாளர்கள் அங்கு இருந்தனர். எல்டாம்ஸ் ரோட் அலுவலகத்தில் காத்து இருந்தோம்.

அரை மணி நேரம் கழித்து அங்கு வந்து இருந்தார். நான் மட்டும் தான் அவருக்கு அறிமுகம் ஆகாதவர். வந்தார் நலம் விசாரித்தார். சரி கிளம்புங்க எனக் கிளம்பினார். நான் உடனே அவ்வளவு தானா எனக் கேட்டேன். பேட்டி எடுப்பது அபூர்வமான விஷயமாகி விட்டது. என்னிடம் சில கேள்வி இருப்பதாக சொன்னேன்.

இதையும் படிங்க: ராதிகாவுக்கு இந்த கேரக்டர் தான் செம மேட்ச் ஆகுது போல… கரை சேருவாரா பாக்கியா..?

உடனே பேசலாமே எனக் கூறி உட்கார்ந்தார். பேட்டி தொடர்ந்தது. ஒருமணி நேரம் கழிந்தது. அப்போ நான் கேள்வி கேட்டேன். உங்களை உலகநாயகன் என கோலிவுட்டே கொண்டாடுகிறது. ஆனா நீங்க உலக படங்களை உங்க பெயரில் ரிலீஸ் செய்வது சரியா? இதில் தேவர் மகன் மட்டும் தான் உங்க படமா இருக்கும் என்றேன்.

ஆனா அவர் கோபப்படாமல் அதில் என்ன தப்பு? நான் பார்த்ததை என் மக்களுக்கு கொடுக்கிறேன். தேவர் மகன் கூட காப்பி படம் தான் என ஓபனாகவே சொல்லிக் கொண்டார் எனக் கூறினார். இப்படி தன்னுடைய தப்பை கமல் எப்போதுமே மழுப்புவதை வேலையாக வைத்திருப்பார் போல என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story