கமலிடம் உதவி கேட்டு வந்த பாலுமகேந்திரா... பேசவே விடாமல் வாயடைத்த கமல்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

இயக்குனர்களில் 70களில் முக்கிய இடம் பிடித்திருந்தவர் இயக்குனர் பாலுமகேந்திரா. இவரின் வாழ்வில் எண்ணற்ற சம்பவங்கள் நடந்தாலும் கமலுடனான அந்த பிணைப்பு குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலுமகேந்திராவின் திரைப்பயணம் முதலில் ஒளிப்பதிவாளராக தான் துவங்கியது. பின்னர் சினிமாவில் இயக்கும் வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. பாலுமகேந்திரா ஒளிப்பதிவில் வந்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும். அதைப்போல, இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் அழியாத கோலங்கள். தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஒரு இயக்குனர். எப்போதுமே யதார்த்தை மட்டுமே விரும்புவது பாலுமகேந்திரா பாணி.

பாலுமகேந்திரா
இப்படி இருந்த நிலையில், அவரின் மறுபடியும் படத்தால் பெரிய பண நெருக்கடிக்கு உள்ளானார். திரை பிரபலங்கள் பலரிடம் கேட்டு பார்த்தாலும் இவரால் பணத்தினை ஏற்பாடு செய்ய முடியவில்லை. சரி கமலிடம் கேட்கலாம் என நினைத்திருக்கிறார். அவரை காண நேரில் சென்றும் விட்டார். ஆனால் எப்படி கேட்பது என்பதே தெரியவில்லை. தொடர்ந்து இருவரும் சினிமா குறித்து வெவ்வேறு கதைகளை பேசிக்கொண்டே இருந்தனர். இருந்தும், இவருக்கு மனதில் எப்படி கேட்கலாம் என்பதே கவலையாக இருந்திருக்கிறது. அப்போது, கமல் சற்று நேரம் இருங்கள் எனக் கூறி உள்ளே சென்று இருக்கிறார்.

இதையும் படிங்க: “கமல் படம் மாதிரியே இல்ல, தேறாது”… அதிர்ச்சியடைந்த ஏவிஎம்… சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்கள்…

சில நிமிடங்களில் வெளியான கமல், கையில் பல லட்சங்களுடன் வந்திருக்கிறார். அதை அப்படியே பாலுமகேந்திராவின் கையில் கொடுத்து விட்டு என் ராஜ்கமல் நிறுவனத்திற்கு ஒரு படம் செய்து தர முடியுமா? எனக் கேட்டாராம். இந்த பணத்தினை அந்த படத்திற்கு அட்வான்ஸாக வைத்து கொள்ளுங்கள் என்றாராம். அப்படம் தான் சதி லீலாவதி. கமல் மற்றும் கோவை சரளா இருவரின் காம்பினேஷன் படம் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it