தமிழ்சினிமாவில் கமலின் புகழை உச்சியில் கொண்டு வந்து விட்ட இயக்குனர்களில் இவரும் ஒருவர்

Salankai oli
கமல் சினிமாவில் சாதிக்க அவரது தனிப்பட்ட நடிப்பு ஒரு காரணமாக இருந்தாலும் அதற்கு உந்துசக்தியாக பல இயக்குனர்கள் இருந்துள்ளனர். அவர்களில் கே.பாலசந்தர், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார் என பலர் உண்டு. ஒவ்வொரு இயக்குனருக்கும் சில படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
பாலசந்தரை எடுத்துக் கொண்டால் அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், புன்னகை மன்னன் படங்களை சொல்லலாம். பாரதிராஜாவுக்கு பதினாறு வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் படங்களைச் சொல்லலாம். மணிரத்னத்துக்கு நாயகன் படத்தைச் சொல்லலாம். கே.எஸ்.ரவிகுமாருக்கு அவ்வை சண்முகி, தசாவதாரம் படங்களைச் சொல்லலாம். ஷங்கருக்கு இந்தியன், இந்தியன் 2 படங்களைச் சொல்லலாம்.
அவர்களில் ஒருவர் தான் இயக்குனர் கே.விஸ்வநாத்.

Sippikkul Muthu
தனி முத்திரை
இவரது படங்கள் அடாவடி இல்லாமல் அமைதியாகவும் ரசிக்கும் விதத்திலும் உள்ளார்ந்த ஒரு அனுபவத்தையும் உண்டாக்கும் விதத்தில் இருக்கும். ரசிகனின் ரசனையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இயக்குனர் இவர்.
தெலுங்கு திரைப்படத்துறையில் வெற்றி பெற்ற இயக்குனர். அது மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இவர் குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துள்ளார். இவரது நடிப்பும் சரி. இயக்கமும் சரி. தனி முத்திரை பதிக்கும் விதத்தில் முத்தாய்ப்பாகவே இருக்கும்.
இவரது இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான சில கமல் படங்களைப் பார்க்கலாம்.
சங்காரபரணம்
190ல் வெளியான இந்தப்படத்தின் இயக்குனர் கே.விஸ்வநத். சோமயாஜூலு, மஞ்சு பார்கவி, சந்திர மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார். பாடல்கள் டாப் டக்கர். இந்தப்படத்தின் வெற்றி பட்டி தொட்டி எங்கும் பரவலாக இருந்தது.
சலங்கை ஒலி
1983ல் தமிழ்சினிமா ஒரு பெரும் பொக்கிஷத்தைத் தந்தது. அது தான் சலஙங்கை ஒலி. படத்தை இயக்கியவர் கே.விஸ்வநாத். கமல்ஹாசன், ஜெயப்பிரதா இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்தனர். இந்தப்படத்தில் எஸ்.பி.பால சுப்பிரமணியத்தின் மகள் எஸ்.பி.சைலஜாவும் நடித்துள்ளார்.
தந்தையுடன் இணைந்து இந்தப்படத்திற்காக 3 பாடல்களையும் பாடியுள்ளார். நாத வினோதங்கள், வேதம் அணுவிலும், வான் போலே ஆகிய பாடல்கள் தான் அவை. பரதநாட்டியத்தை மையமாகக் கொண்டு வெளிவந்த இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
கமல் அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன. இந்தப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.
சிப்பிக்குள் முத்து

Sippikkul Muthu
1986ல் தமிழ்சினிமா ஒரு பெரும் பொக்கிஷத்தைத் தந்தது. அது தான் சிப்பிக்குள் முத்து. இந்தப்படத்தை இயக்கியவரும்; கே.விஸ்வநாத் தான். கமலுடன் ராதிகா ஜோடியாக நடித்துள்ளார்.
சரத்பாபு, ஒய்.விஜயா, மேஜர் சுந்தரராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். கன்னட மொழியில் இந்தப்படம் சுவாதி முத்யம் என்ற பெயரில் வெளியானது.
பாசவலை
1995ல் இந்தப்படம் வெளியானது. சுபசங்கல்பம் என்ற தெலுங்கு படத்தின் டப்பிங் தான் இது. எஸ்.பி.பாலசுப்பரமணியம் தயாரிப்பு. விஸ்வநாத் இயக்கம்.

Pasavalai
கமலுடன் பிரியா ராமன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் கமலுக்கு முதலாளியாக வரும் கே.விஸ்வநாத் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்த ஆண்டில் ஆந்திர அரசிடமிருந்து 5 விருதுகளை வாங்கியது.

K.Viswanath Kamal
சமீபத்தில் இவரை கமல் மரியாதை நிமித்தமாக ஹைதராபாத்தில் உள்ள இவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தார். அப்போது தலைகுனிந்து கைகளை பிடித்தபடி வணங்கினார். கலைக்கும், செய்நன்றிக்கும் அவர் கொடுக்கும் மரியாதையைத் தான் இது காட்டுகிறது.