Connect with us

Cinema History

கிராமிய வெற்றிப்பட இயக்குனரிடம் கைகோர்க்கிறாரா கமல்?

தமிழ்சினிமாவில் கிராமியப்படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு இருக்கும். ஏனென்றால் அங்கு இருந்து தான் நாட்டிற்கான நல்லொழுக்கமான பாரம்பரிய விதை தூவப்படுகிறது.

மண்ணின் மணம், உரம் போன்ற பாரம்பரியம், முன்னோர்களின் வீர தீர வரலாறுகள், காதல், கொடை, வீரம், நகைச்சுவை, சோகம், சென்டிமெண்ட் என எதற்கெடுத்தாலும் பஞ்சமில்லாத கதைகளத்தை அடிப்படையாகக் கொண்டது கிராமத்து சினிமாக்கள் தான்.
அவற்றையே தன் மூலதனமாக மாற்றி பல வெற்றிப்படைப்புகளை தந்திருப்பவர் இயக்குனர் முத்தையா.

dirctor Muthiah

இவரது படங்களைப் பார்த்தாலே நமக்கு புரிந்து விடும். இவர் படங்களில் சாதீயக்கருத்துக்கள் அதிகமாக தலைதூக்குகிறது என்றும் ஒரு சர்ச்சைக்குரிய கருத்து உள்ளது. இருந்தாலும் அனைத்துப்படங்களும் சக்சஸ் தான். தற்போது இவரிடம் கமலே கதை கேட்டு வருகிறாராம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கமல் ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோரிடமும் கதை கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் புதியவர்களுக்கு இடம் கொடுப்பவர் தான் கமல்ஹாசன் என்பது நாம் அறிந்த விஷயம் தான். அந்த வகையில் இயக்குனர் முத்தையா இயக்கிய சில படங்களை இங்கு பார்க்கலாம்.

குட்டிப்புலி

2013ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் முத்தையா. சசிக்குமார், லட்சுமி மேனன் ஆகியோரது நடிப்பில் வெளியான அட்டகாசமான கிராமிய சித்திரம்.

அருவாக்காரன், காத்து காத்து, ஆத்தா உன் சேலை, தாட்டியாரோ, தாட்டியாரே உள்ளிட்ட பல பாடல்கள் உள்ளன. ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

கொம்பன்

2015ல் வெளியான இந்தப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், சூப்பர் சுப்பராயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். கம்பிக்கரை வேட்டி, அப்பப்பா, கருப்பு நிறத்தழகி, மெல்ல வளஞ்சது உள்பட பல பாடல்கள் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

தேவராட்டம்

2019ல் இயக்குனர் முத்தையா இயக்கிய அதிரடி திரைப்படம். கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், வினோதினி, சூரி, பெப்சி விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

நிவாஸ்.கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். மதுர பளபளக்குது, பசம்புக்கலி, எங்கா அட்டம், அழகரு வாராரு, லேசா லேசா, ஆத்தா தொட்டில், உலகம் உன்ன விட்டு ஆகிய பாடல்கள் உள்ளன.

புலிக்குத்தி பாண்டி

2021ல் வெளியான இந்தப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். விக்ரம்பிரபு, லட்சுமி மேனன், சமுத்திரக்கனி, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர்.

என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். இந்தப்படம் கொரோனாவின் காலகட்டத்தில் கடந்த ஆண்டு பொங்கல் அன்று சன் டிவியில் ரிலீஸ் ஆனது. அலங்காலன்குருவி, சொல்லாமத்தான், அளம் உழுதுபோட்டேன் உள்ளிட்ட பாடல்கள் உள்ளன.

விருமன்

Karthi and Athithi in Viruman

இன்னும் வெளியாகாத இந்தப்படத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இயக்குனர் முத்தையாவின் கைவண்ணத்தில் உருவாகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்தப்படத்தில் அறிமுகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் வெளியாக உள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.

google news
Continue Reading

More in Cinema History

To Top