இந்தியன் 2ல் அனிருத் பண்ணிய சேட்டை... கமலும், ஷங்கரும் இப்படி கவனிக்காமல் விட்டுட்டாங்களே...!

இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பா.விஜய் எழுத அனிருத் இசை அமைத்துள்ளார். அதுதான் 'பாரா' பாடல். இதை ரொம்ப அழகாக புறநானூறு ஸ்டைலில் எழுதியுள்ளார் கவிஞர் பா.விஜய். போர்க்களத்தில் வெள்ளையனை எதிர்த்து தனி ஒரு மனிதனாக வந்து போரிட புயலென புறப்பட்டு வருகிறான் ஒருவன். அந்த சூழலுக்கான பாடல் தான் இது.

இது ஒரு சிக்கலான மெட்டு. இந்தப் பாடலில் அருமையான வரிகளைப் போட்டு இருக்கிறார் பா.விஜய். இந்தப் பாடலில் பிடித்த வரிகள் இதுதான். 'புரவிக்கும் றெக்கை உண்டு. புயலுக்கும் தான் உருவம் உண்டு. எம் தாய் மண் மேல் ஆணை. இது தமிழ் மானத்தின் சேனை. இனி வெள்ளை ரத்தம் கொண்டு உடை வாளில் ஏற்று சாணை' என்று எழுதியிருப்பார்.

இந்தப் பாடலுக்கு இடையில் காதலியும் சொல்வது அசத்தலாக உள்ளது. 'கன்னங்கரும் இரவு போதாதா நமக்கு... வெள்ளைக்கார நிலவு வான் மீது எதற்கு? ரத்தக்கறை படிஞ்ச உன் வாளின் முனைக்கு முத்தக்கறை ஒண்ணு வேணாமா துணைக்கு' என்று அழகாகக் கேட்டு இருப்பார்.

Para song

Para song

'உன்னோட காலடி குழம்பாகணும்... உன் மேல விழுப்புண் தழும்பாகணும்... உன் கையில் சேரும் வரமாகணும்... இல்லை தாய்மண்ணுக்கே தான் உரமாகணும்... என்பாள் காதலி. அதற்கு காதலன், அடியே அடியே அல்லி கொடியே, கொல்லை வாசல் பக்கம் வரட்டா, புரியாத வலியே, சேலைப்புலியே... புலியே... உன் மேல் வரிகள் எண்ணி எண்ணிச் சொல்லட்டா' என அவ்வளவு அழகான வரிகளை நேர்த்தியாக படைத்துள்ளார் பா.விஜய். இது புறநானூறும், அகநானூறும் கலந்தாற்போல உள்ளன.

இதையும் படிங்க... சுதாரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன்! சூர்யா மிஸ் பண்ண வாய்ப்பை கையில் எடுக்கும் SK

கமலும், ஷங்கரும் இந்தப் பாடலைக் கவனிக்காமல் விட்டார்களா என்ன என்று தெரியவில்லை. ரெக்கார்டிங்கில் அனிருத் புரியாத அளவுக்கு சேட்டை செய்துள்ளார். இதுல உண்மையிலேயே பா.விஜய்க்கு மட்டும் வாழ்த்து சொல்லலாம். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story