கமலுக்கும் ஷங்கருக்கும் முட்டிக்கிச்சி!... ஆனாலும் உலக நாயகன் கிரேட்!.. என்னய்யா இங்க நடக்குது?..

கமலுக்கும், அவருடன் பணியாற்றும் இயக்குனர்களுக்கும் அடிக்கடி ஒத்துவராதுன்னு சொல்வதுண்டு. இந்தியன் படத்தின்போதும் இப்படி கமலுக்கும், ஷங்கருக்கம் முரண்பாடு இருந்ததாம். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா....

இதையும் படிங்க... 50ல் சதம் அடித்த விஜய் சேதுபதி! இந்தாண்டின் முதல் சாதனையை பதிவு செய்து மகாராஜாவா நின்னுட்டாப்ல

உலகம் முழுக்க கமலுக்கான ரசிகர் கூட்டம் இருக்கு. அதனால தான் கமலுக்கு உலக நாயகன்னு பேரு வந்துருக்கு. இந்தியன் 2 படத்தை 3 யூனிட்டா பிரிஞ்சி எடுத்தாங்க. ஒரு யூனிட் ஷங்கர், அடுத்து ஈரம் அறிவழகன், அடுத்ததா வசந்தபாலன். இவங்க 3 யூனிட்டுகளா பிரிந்து எடுத்து எல்லாத்தையும் ஒண்ணு சேர்த்துருக்காங்க.

அந்த அளவு படம் பிரம்மாண்டமா வந்துருக்கு. இரண்டு அறிவாளிகள் சேரும்போது முரண் வருவது இயற்கை தான். 96ல இந்தியன் எடுக்கும்போது ஷங்கர் ஏதோ சொல்றாரு. அதைக் கமல் வேற மாதிரி மாத்த சொல்றாரு. அதற்கு ஷங்கர் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாராம்.

அப்போ கமலிடம் எழுத்தாளர் சுஜாதா தான் 'இந்தப் பையன் கெட்டிக்காரன். நீயும் கெட்டிக்காரன் தான். அதனால முரண்பாடு வேண்டாம். நான் கதை எல்லாத்தையும் கேட்டுருக்கேன். நான் பேக்ரவுண்டா இருக்கேன்'னு ஷங்கருக்காக கமலிடம் சிபாரிசு செய்தாராம். அதன்பிறகு இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாச்சு.

'அபூர்வ சகோதரர்கள்' படத்திற்கு இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ். அவர் பூர்வீகம் தெலுங்கு. அதனால் கமல் சொல்வதை எல்லாம் அவர் கேட்டார் என்று ராசி அழகப்பன் ஒரு விஷயம் சொன்னார். படத்துல ஒரு சென்டிமென்ட் காட்சி. கிரேசி மோகன் இதற்காக 17 பக்கத்துக்கு வசனம் எழுதிவிட்டாராம். அம்மா சென்டிமென்ட் சீன்.

போலீஸ் துரத்துது. அவர் ஓடி வந்து அம்மா கழுத்தில் கத்தியை வைக்கிறார். ஆடியன்ஸ்சுக்கு அது கமலோட அம்மான்னு தெரியும். மற்றபடி அவருக்குத் தெரியாது. ஸ்ரீவித்யாவுக்கும் கணவர் உருவத்தில் இருப்பவர் என்று தெரியும். இந்த இடத்துல 17 பக்க டயலாக்கை பேசணும். குறைஞ்சது 8 நிமிடமாவது ஆகும்.

அது வரைக்கும் போலீஸ் ஏமாந்துக்கிட்டு இருக்காது. அதனால 30 வினாடிகளில் இருந்து ஒரு நிமிடத்துக்குள்ள அந்த வசனத்தைப் பேசி முடிச்சிடணும்னு டைரக்டர் சிங்கீதம் சீனிவாசராவ் சொல்றாரு. கமலுக்கும் அது ஷாக் ஆகிடுச்சு. 'இந்த நேரம் இப்படி சொல்றாரே. இவரு சொல்றதும் நியாயம்தான்'னு நினைக்கிறார் கமல்.

இதையும் படிங்க... எம்ஜிஆருக்குத் தெரியாமல் கல்யாணம் செய்த வாலி… அப்புறம் சமாதானம் செய்தது எப்படி தெரியுமா?

அப்புறம் அந்த 17 பக்க டயலாக்கை அரை பக்கமா சுருக்கி ஒரு டயலாக். அந்தக் காட்சி எடுக்கப்பட்டது. அதற்கு தியேட்டரில் பெரிய கிளாப்ஸ். இதுதான் கமல். எங்கே முரண்படணுமோ அங்கு முரண்பட்டாலும், எங்கு ஒத்துப் போகணுமோ அங்கு ஒத்துப் போவார். அதனால் தான் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றினார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Next Story