சிங்களத்தமிழ், கொங்கு தமிழ், சென்னைத்தமிழ் என காமெடியிலும் பட்டையைக் கிளப்பிய கமல் படங்கள்...

Thenali
டார்க் காமெடி, ஹியூமர் என சில சொல்லாடல்கள் தற்போது தமிழ்த்திரை உலகிற்கு வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதை 35 ஆண்டுகளுக்கு முன்பே கமல் கொடுத்துவிட்டார்.
அப்படிப்பட்ட பரிசோதனை முயற்சிகளையும் அன்றே மேற்கொண்டவர் தான் கமல். சீறுனா சீறுவேன்...கீறினா கீறுவேன் என்ற இவரது பாடல்வரிகளுக்கு ஏற்ப கமல் எந்த ஒரு பாத்திரத்திற்கும் பொருந்துவார் என்பதை அவரது பலதரப்பட்ட படங்களின் வாயிலாக நாம் அறிய முடிகிறது.
இப்போது காமெடியில் பட்டையைக் கிளப்பிய கமல் படங்களில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.
மைக்கேல் மதன காமராஜன்

MMKR2
1990ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியானது. கமல், ஊர்வசி, குஷ்பூ, நாகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா மியூசிக் போட்டுள்ளார். 4 விதமான கேரக்டர்களில் வந்து கமல் கலக்கியிருப்பார்.
அதிலும் காமேஷ்வர ஐயராக வந்து கலக்கும் கமலை நம்மால் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. நகைச்சுவைப் படங்கள் என்றாலே கமலுக்கு கிரேசி மோகன் வசனம் தான். படம் மாஸ் ஹிட்.
சிங்கார வேலன்

Singaravelan
ஆர்.வி. உதயகுமார் இயக்க, 1992ல் வெளியான படம். இளையராஜாவின் இசை படத்திற்கு பக்கபலம். கமல், குஷ்பூ, ஜெய்சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். உடன் நிழல்கள் ரவி, வி.கே.ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா தான் இசை.
காதலா காதலா

Kathala Kathala
1998ல் வெளியானது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியுள்ளார். கமலுடன் பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா, எம்.எஸ்.வி., மௌலி, வடிவேலு, கிரேசி மோகன், கொச்சி ஹனீபா, கோவை சரளா, வையாபுரி, மதன்பாப் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்குக் கதை எழுதியவர் கிரேசி மோகன்.
தெனாலி
2000ல் வெளியான படம். இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். கமலுடன் ஜெயராம், தேவயாணி, ஜோதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். படம் வெள்ளிவிழா கண்டது. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் இப்படத்திற்கான சூட்டிங் நடைபெற்றது. சிங்களத்தமிழில் வெளுத்து வாங்குவார் கமல்.
அவ்வை சண்முகி

Avvai shunmugi
1996ல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியானது. கமல், மீனா, நாகேஷ், ஜெமினிகணேசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மிசஸ் டவுட்ஃபயர் என்ற ஆங்கிலப்படத்தின் தழுவல் தான் இது. மாமி வேடத்தில் வரும் கமல் அசத்தலான நடிப்பைத் தந்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திழுப்பார்.
சதிலீலாவதி

Sathileelavathi
1995ல் பாலுமகேந்திராவின் இய்கத்தில் வெளியான படம். கமல் தயாரித்துள்ளார். கிரேசி மோகன், இளையராஜா, ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா, கமல், கோவை சரளா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.
படம் காமெடியில் பின்னிப் பெடல் எடுத்தது. அதிலும் கமலுக்கு ஜோடி கோவை சரளா என்றால் கேட்கவா வேண்டும். கொங்குதமிழில் கமல் செம மாஸ் காமெடி நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
பம்மல் கே.சம்பந்தம்

Pammal K Sambantham
2002ல் கமல், சிம்ரன் நடிப்பில் வெளியான மாஸான படம். மௌலி இயக்கியுள்ளார். கமலுடன் அப்பாஸ், சினேகா, மணிவண்ணன், ஸ்ரீமன், சார்லி, வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், யூகிசேது உள்பட பலரும் நடித்துள்ளனர். தேவா இசை அமைத்துள்ளார். சென்னை பாஷையில் கமல் வெளுத்து வாங்கியிருப்பார்.
பஞ்சதந்திரம்

Panja Thanthiram
கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் வெளியான படம்.
2002ல் வெளியானது. கமலின் சொந்தப்படம். வழக்கம்போல கிரேசி மோகன் தான் வசனம் எழுதியுள்ளார்.
கமலுடன் சிம்ரன், ஜெய்ராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வசூல் ராஜா எம்பிபிஎஸ்

Vasool raja MBBS
2004ல் சரண் இயக்கத்தில் வெளியான படம். கமலுடன் பிரபு, சினேகா, பிரகாஷ் ராஜ், நாகேஷ், ஜெயசூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். படம் செம மாஸ்.