நம்மவருக்குப் பிறகு மீண்டும் கமல், கரண் கூட்டணி... அடுத்த அதிரடி ஆரம்பம்..!

by sankaran v |   ( Updated:2024-08-25 13:24:18  )
karan kamal
X

karan kamal

90ஸ் கிட்ஸால மறக்கவே முடியாத நடிகர் கரண். ஆரம்பத்துல பல படங்கள்ல குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அண்ணாமலை படத்தில் சரத்குமாருக்கு மகனாக வருவார். அதுக்குப் பிறகு கமலோட நம்மவர் படத்துல தான் கரண் நடித்தார். அதுல கமலுக்கு சரி சமமான கேரக்டர்ல சூப்பரா பெர்பார்மன்ஸ் பண்ணிருப்பாரு.

கமல் புரொபசரா கெத்துக் காட்ட அவருக்கு கொஞ்சமும் சளைக்காமல் கரண் போட்டி போட்டுக் கொண்டு கெத்து காட்டுவார். நம்மவர்னு சொன்னாலே கமல், கரண் நினைவு தான் வரும். அந்த அளவு அதுல அவரோட நடிப்பு சூப்பராக இருக்கும். அதுக்குப் பிறகு இருவரும் இணைந்து படத்தில் நடிக்க வாய்ப்பு அமையவில்லை.

Also read: கோட் படத்துக்கு சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா? பிசினஸ்ல மிஞ்சிய லியோ

ஆனாலும் கரண் தொடர்ந்து பல படங்களில் கோயம்புத்தூர் மாப்ளே, கோகுலத்தில் சீதை, காதல் கோட்டை, லவ் டுடே, துள்ளித்திரிந்த காலம், கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய படங்களில் மாஸாக நடித்து இருப்பார். தான் ஒரு சிறந்த நடிகர்னும் நிரூபித்து இருப்பார். அதன்பிறகு அவர் கதாநாயகனாக கொக்கி படத்தில் நடித்தார்.

Nammavar

Nammavar

அதன்பிறகு கருப்பசாமி குத்தகைக்காரர், காத்தவராயன், கனகவேல் காக்க, மலையன், தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் கொக்கி, கருப்பசாமி குத்தகைக்காரர், தம்பி வெட்டோத்தி சுந்தரம் ஆகிய படங்கள் ஹிட். அதற்குப் பிறகு அவர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கல. அவர் நடிச்சி ரொம்ப வருஷமாச்சுன்னு எல்லாரும் பேசினாங்க. ஆனா இப்போ ஒரு அப்டேட் வந்துருக்கு. இப்போ நம்மவருக்குப் பிறகு கமல், கரண் கூட்டணி சேரப்போகிறதாம்.

தக் லைஃப் படத்துக்குப் பிறகு அன்பறிவு இயக்கத்தில் கமல் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தோட கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே கமல் தான். இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம். இதுல ஒரு சேலஞ்சிங்கான வில்லன் ரோல் இருக்கு. அதுல கரண் நடிச்சா எப்படி இருக்கும்னு எல்லாரும் பேசியிருக்காங்க.

அதனால கமலும் கரண்கிட்ட பேசலாம்னு சொன்னாராம். அதனால விரைவில் கமலுக்கு மீண்டும் கரண் இந்த ஆக்ஷன் படத்தில் வில்லனாக நடிப்பாருன்னு எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் கமல் படத்தில் கம்பேக் கொடுப்பதால் அது நிச்சயம் அவருக்குப் பலன் கொடுக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story