பல வருட நட்பை பிரித்துவிட்ட கமல்.!? எவ்வளவு பெரிய இயக்குனர் அவர்.! இப்படி செஞ்சிட்டிங்களே.?!
தற்போது சர்ச்சைகள் என்றால் அது சிம்பு என்று கூறிவிடுவார்கள் பலர். ஆனால், பலருக்கும் தெரியாது இதெற்க்கெல்லாம் முன்னோடி கமல் தான் என்று. அந்தளவு சர்ச்சைகளில் சிக்கியவர் கமல். ஆனால் அவையெல்லாம் பெரும்பாலும் அவருடைய படங்களுக்கு உண்டான சர்ச்சைகளாக தான் இருக்கும்.
இவருக்கு சினிமாவில் எல்லாம் தெரியும். அனைத்து துறைகளிலும் வேலை செய்துள்ளார். அதனால், அவருக்கு பெரும்பாலான விஷயங்கள் தெரிந்திருக்கும். அதனால், அவர் தனது படங்களில் நிறைய தலையிடுவார் என்கிற பேச்சுக்கள் உண்டு. அவர் எந்த தலையீடும் செய்யாமல் நடித்த படங்கள் ஒரு சிலவையே.
இவர் ஆரம்பகாலத்தில் கமர்சியல் ஹிட் கொடுக்க தஞ்சமடைந்த இயக்குனர் என்றால் அது எஸ்.பி.முத்துராமன் தான். இவர் தான் ரஜினி கமல் என இருவருக்கும் பல்வேறு கமர்சியல் ஹிட் திரைப்படங்களை இயக்கியள்ளார். இவருக்கு ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பாபு என்பவர் இருந்து வந்துள்ளார். பெரும்பாலான படங்களுக்கு இவரே ஒளிப்பதிவு செய்துள்ளார்.
எஸ்.பி,முத்துராமன் இயக்கத்தில் எனக்குள் ஒருவன் பட ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கும் போது , கமல், ஒளிப்பதிவாளர் பாபுவிடம் ஒரு ரயில் கட்சியில், காமிராவை இப்படி வைத்துக்கொள்ளலாமா என யோசனை கூறியுள்ளாராம்.அப்போது ஒளிப்பதிவாளர் பாபு , கேமிராவை எப்படி வைக்க வேண்டும் என எனக்கு தெரியும். நீங்க நடிக்க மட்டும் செய்யுங்கள் என கூறிவிட்டாராம்.
இதையும் படியுங்களேன் - எனக்கு இது பத்தாது இன்னும் வேணும்.! கமல்ஹாசனை சங்கடப்படுத்திய இளம் ஹீரோ.!
இந்த மனஸ்தாபம் வளர்ந்துவிட்டதாம். அதன் பிறகு மீண்டும் எஸ்.பி.முத்துராமன் - கமல் இணைந்துள்ளனர். அப்போது, பட பூஜையில் ஒளிப்பதிவாளர் பாபு இருந்தாராம். ஆனால்,ஷூட்டிங் தொடங்கிய போது அவர் இல்லையாம் வேறு ஒரு ஒளிப்பதிவாளரை வைத்து படத்தை எடுத்து முடித்துள்ளனர் படக்குழு.
இதுபற்றி ஒளிப்பதிவாளர் பாபு ஏதும் கருத்து கூற மறுத்துவிட்டாராம். இதனை ஒரு பேட்டியில் பத்திரிகையாளர் இதயக்கனி விஜயன் தெரிவித்துள்ளார்.