கமல் மீது விஜய்சேதுபதிக்கு காண்டா? இதெல்லாம் இப்போ தேவையா?

VJS K
உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை 7 சீசன்களாகத் தொகுத்து வழங்கினார். இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அனைத்துத் தரப்பினரும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க ஆர்வம் காட்டினர். அதிலும் கமல் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் டிஆர்பியும் எகிறியது.
அந்தவகையில் கமலுக்கு அடுத்த எபிசோடிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் தன்னால் தொகுத்து வழங்க இயலாது என்று அறிக்கை வெளியிட்டார்.

BP8
அதே நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து தொகுத்து வழங்குபவர்களின் பெயர்களில் சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி பெயர் எல்லாம் அடிபட்டது. ஆனால் கடைசியாக தேர்வு செய்யப்பட்டவர் விஜய் சேதுபதி.
பிக் பாஸ் சீசன் 8 முன்னோட்டத்தை விஜய் டிவியில் காட்டுகிறார்கள். அப்போ பிக்பாஸ்ல இது இது இப்படித்தான் இருக்கும்னு மக்கள் விஜய் சேதுபதிகிட்ட கருத்து சொல்றாங்க. அது கமல்ஹாசனைத் தண்டிக்கிற மாதிரி, கிண்டல் பண்ற மாதிரி இருக்குன்னு சிலர் சொல்றாங்க.
ஆனா இது இப்படித்தான் இருக்கும்னு அறுதியிட்டு சொல்ற தகுதி இங்குள்ள எவனுக்குமே கிடையாது. இதைத்தான்யா காட்டுறாங்க. ஏன்னா விஜய் சேதுபதிக்கும், கமலுக்கும் உள்ள நட்பு அளவிடற்கரியது.
உலகநாயகன் கமலின் 60ம் ஆண்டு கலைப்பணியைப் பாராட்டி ஒரு கூட்டம் நடந்தது. அதுல விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார். இந்தியன் 2 படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு வந்தது. நான் மறுத்துட்டேன்னு சொன்னார். நிறைய படங்கள்ல நடிச்சிக்கிட்டு இருந்தேன்.
அதனால என்னால தேதியைக் கொடுக்க முடியல. நான் மறுத்துட்டேன்னு சொன்னதாகவும் அப்போது செய்தி பிளாஷ் ஆனது. அதன்பிறகு ராஜ்கமல் பிலிம்ஸில் நடிக்கணும்கற ஆசை அழுத்தமாவும் ஆழமாவும் இருக்கு. ஆகவே அவங்கக்கிட்ட வாய்ப்பு கேட்குறேன்னு சொன்னதும் தான் அவருக்கு விக்ரம் படத்துல நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அது அவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்த படம்.
Also read: என்னது கோட் படத்தால விநியோகஸ்தர்களுக்கு 13 கோடி நஷ்டமா? தளபதி படமாச்சே உண்மைதானா?!
கமல் நிகழ்ச்சிகளை அடுத்து தொகுத்து வழங்கப் போற தகுதி யாருக்கு இருக்குன்னு நினைக்கும்போது பலருடைய பேர்கள் வந்தது. ஆனா கடைசியா வந்தது விஜய்சேதுபதி. அவருக்கு கிண்டல் பண்ற தொனி ஆனா கண்டிக்கவும் செய்யும்.
அவரை வைத்து கமல் மேல களங்கம் சுமத்தி சிலர் பிரிவினை வேலைகளைப் பார்க்கிறார்களாம்.
இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட லிங்கை சொடுக்குங்க.