தேவர்மகன் படமே காப்பிதானாம்… உலகநாயகனே ஒத்துக்கொண்டதுதான் சுவாரசியம்…!

Published on: November 15, 2023
---Advertisement---

உலகநாயகன் கமல் பேட்டி என்றாலே அதற்கான பதிலை மின்னல் வேகத்தில் சொல்லி பத்திரிகையாளரையே திணறடிப்பார். அப்படி ஒரு அழகான அனுபவத்தை பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ.பிஸ்மி சந்தித்துள்ளார். அவர் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

அப்போது மீடியாக்கள் எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் கமலை சந்தித்து விட முடியாது. அப்படியே சந்திக்க வேண்டும் என்றால் முதலிலேயே என்ன கேள்வி கேட்கப்போகிறோமோ அதை எழுதி அவரது அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

அதற்கு அடுத்த தீபாவளிக்குப் பேட்டி வச்சிக்கலாம் என்பார். தற்போது அவரது பிஆர்ஓ வாக நிகில் முருகன் வந்ததற்கு பிறகுதான் பத்திரிகையாளர்கள் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. அந்த வகையில் ஒரு முறை கமல் அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்தார்.

Kamal Bismi

பேட்டி எடுக்க பிரபலமான பத்திரிகையாளர்கள் வந்து இருந்தனர். எல்லோரையும் பார்த்து நலம் விசாரித்து விட்டு கமல் ‘பார்க்கலாமா?’ என புறப்பட ஆரம்பித்தார். அப்போது நான் ‘கமல் சார் அவ்வளவு தானா?’. என்று கேட்டேன். நான் அவருக்கு புதுமுகம்.

சார் நான் 25 கேள்விகள் தயார் செய்து வந்துள்ளேன் என்றேன். உடனே என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து வாங்க பேசலாம் என்றார். மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டார்கள். ஒவ்வொருவரும் விதவிதமாகக் கேட்க நான் மட்டுமே விமர்சனங்களை முன்வைத்தேன்.

சார் உங்களை உலகநாயகன்னு சொல்றாங்க… ஆனா நீங்க வெளிநாட்டு படங்களை காபி அடிக்கிறீங்களே… உறுத்தலையா?

ஆனா இந்தக் கேள்விக்குக் கோபப்படுவாருன்னு நினைச்சேன். ஆனா அவரு என்ன சொன்னாருன்னா… நான் பார்த்த நல்ல விஷயங்களை மக்களுக்குக் கொடுக்கிறேன்.

டைட்டில் கிரெடிட்டோட கொடுக்குறது தானே சரியா இருக்கும். அவங்க சரக்க உங்க சரக்கு மாதிரி போட்டுக்குறீங்களே… இது சரியா? கதைன்னு ஒங்க பேரைப் போட்டுக்குறீங்களேன்னு கேட்டேன். அதுக்கும் ஏதோ ஒரு பதில் சொன்னாரு.

Devar magan

அப்புறம் நீங்க எடுத்த படங்கள் எல்லாமே வெளிநாட்டு படங்களோட காப்பி தான். தேவர் மகன் மாத்திரம் தான் உங்க சரக்கு போலன்னு கேட்டேன். சட்டுன்னு அவரு குறுக்கிட்டாரு. அதுவும் காப்பி அடிச்சது தான்னு அந்தப் படத்தோட பேரையும் சொன்னாரு. எனக்கு வந்து அவரு பதில்ல உள்ள அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருந்தது.

இதுல முக்கியமான விஷயம் என்னன்னா அதை வந்து அவரு ஒத்துக்கிட்டு அந்தப் படத்தோட பேரை சொன்னாரு. அடடா இவரு அதை ஒத்துக்கிட்டாரேங்கற புல்லரிப்புல அவரு சொன்ன அந்தப் படத்தோட பேரையே காதுல வாங்க மறந்துட்டேன்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.