More
Categories: Cinema News latest news

இவங்க இல்லைன்னா என் பொழப்பு நாறியிருக்கும்…! பிரபல நடிகையை பற்றி கூறும் கமல்….

விக்ரம் படத்தின் வெற்றி கமலுக்கு ஒரு மறுபிறவி என்றே சொல்லலாம். இன்றைய தலைமுறைகளுக்கு ஒரு பாடமாக விளங்கினார் இந்த படத்தின் மூலம். கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் ஒரு பூகம்பத்தையே புரட்டி போட்டது என்றே கூறலாம்.

Advertising
Advertising

அந்த அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த நிலையில் கமல் என்னை ஒரு ஃபிலிம் மேக்கராக திரும்பவும் உங்கள் முன்னாடி நிறுத்திய படம் விருமாண்டி என கூறியுள்ளார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்திருப்பார். இதில் தெற்கத்திய பாஷைகளில் கமலும் அபிராமியும் தன் வசனங்களை பேசி அசத்தியிருப்பர்.

மேலும் கமல் அபிராமியை பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்களை கூறினார். அபிராமிக்கு வேற்று மொழி பாஷைகள் எல்லாம் தெரியுமாம். மேலும் அவர் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதால் சரளமாக அமெரிக்கர்கள் பேசுவதை போன்று ஆங்கிலத்தில் பேசக்கூடியவராம்.

அதனால் தான் என் எல்லா நடிகைகளுக்கும் அபிராமியை ட்ப்பிங் கொடுக்க சொல்வேன். விஸ்வரூபம் படத்தில் கூட அபிராமி தான் வாய்ஸ் கொடுத்திருப்பார். பல மொழிகளை தெரிந்தவர். இவரின் உதவி எனக்கு பேருதவியாக இருந்தது என்று கூறினார்.

Published by
Rohini

Recent Posts