களத்துல நான் ஜெயிக்கலாம்..கலையில நீங்க ஜெயிச்சுட்டீங்க...! கமலை பாராட்டிய அரசியல் பிரபலம்..

by Rohini |
kamal_main_cine
X

இப்போதைய தமிழ் சினிமாவின் டிரென்டே கமல் நடித்த ‘விக்ரம்’ படம் தான். படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையிலும் இன்னும் இந்த படத்தை பற்றிய பிரமிப்பு மக்கள் மத்தியில் இருந்து கொண்டே வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலோடு சேர்ந்து விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் , நரேன் உட்பட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

kamal1_cine

4 வருடங்கள் கழித்து கமலை திரையில் காட்டிய படம் தான் விக்ரம். அதுவும் லோகேஷின் பிரம்மாண்டத்தில் படம் தாறுமாறு வெற்றி. அத்தனை இளம் நடிகர்களையும் ஆச்சரியத்தில் திகைக்க வைத்து விட்டார் நடிகர் கமல் ஹாசன். இந்த வயதிலயும் இப்படியா நடிப்பார் என பிரமிப்பில் ஆழ்ந்துள்ளனர் நடிகர்கள்.

kamal2_cie

இந்த நிலையில் விக்ரம் படத்தை பிரபல அரசியல் வாதியும் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் நேற்று திரையரங்கில் போய் பார்த்தார். படத்தை பார்த்து கமலை பாராட்டியுள்ளார். ஏற்கெனவே கோவை மாவட்ட சட்டமன்ற தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசனுடன் தேர்தலில் போட்டியாக நின்றவர் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

kamal3_cine

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களை தேர்தலில் நான் ஜெயித்ததற்கு மீண்டும் பெருமைபடுகிறேன். உங்கள் கலைபணியால் இன்னும் மக்களை மகிழ்விக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார்.

Next Story