லோகேஷ் இத செஞ்சது ரொம்ப பெருமையா இருக்கு! என்ன ஆண்டவரே நீங்களா இப்படி சொல்றது?

தமிழ் சினிமாவில் கமலுக்கு ஒரு சரியான தரமான வெற்றியை கொடுத்து அடுத்த இன்னிங்ஸை ஆட வைத்த பெருமை லோகேஷுக்குத்தான் சேரும். ஏனெனில் விக்ரம் படம் ஏற்படுத்திய தாக்கம் அப்படி.

யாரும் எதிர்பாராத ஒரு கதைக்களத்தோடு அதுவும் இந்த வயதில் கமலை இப்படி வெறித்தனமாகவும் காட்ட முடியும் என்பதை ஒவ்வொரு ஃப்ரேமிலும் காட்டியிருப்பார் லோகேஷ். படம் வெளியாகி தாறுமாறு வெற்றியடைந்ததோடு ஒரு அசைக்க முடியாத சுவடாகவும் விக்ரம் படம் மாறியது.

இதையும் படிங்க: அய்யோ முடியலடா சாமி!.. அயலான் ரிசல்ட்.. இப்பவே கண்ணுக்குத் தெரியுதே!.. பொங்கலோ பொங்கல் தான்!..

அடிப்படையில் கமலின் தீவிர வெறியன்தான் லோகேஷ். கமலின் படங்களை ஆரம்பத்தில் இருந்து பார்த்து வளர்ந்த ஒரு சாதாரண ரசிகனாகத்தான் இருந்திருக்கிறார். தான் ஒரு கமலின் ரசிகன் என்பதை சொல்லாமல் சொல்லி காட்டியிருக்கிறார் லோகேஷ்.

அடுத்ததாக லோகேஷின் லியோ திரைப்படம் வெளியாகும் நிலையில் லோகேஷை பற்றி கமல் பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் லோகேஷ் அடுத்ததாக ரஜினியை வைத்துதான் படத்தை எடுக்கப் போகிறார்.

இதையும் படிங்க: அஜித் பேசுனா மட்டும் இனிக்குது! விஜய் பேசுனா கசக்குதா? அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில தல மேல கை வச்சாச்சா?

இதை குறிப்பிட்டு பேசிய கமல் ‘என்னோட ரசிகன் ஒருவன் என் நண்பருக்காக ஒரு படம் பண்ணுவது என்பது எனக்குத்தான் பெருமை’ என்று லோகேஷைப் பற்றியும் தனக்கும் ரஜினிக்கும் உண்டான நட்பை பற்றியும் அழகாக கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் கிரிக்கெட் ஆடுகளத்தில் விளையாடுவது என்பது வேறு. அதில் போட்டி இருக்கும். அதற்காக ஓடி வந்து பால் போடும் போது காலை இடையில் விட்டு தட்டி ஜெயிக்க வேண்டும் என்று ஒரு நேரமும் நினைத்ததில்லை. நினைக்கவும் மாட்டோம் என்று தனக்கும் ரஜினிக்கும் உள்ள அந்த இணக்கத்தைப் பற்றி கூறியிருந்தார் கமல்.

இதையும் படிங்க: நீங்க பேசாம தமிழ்ப்படம் 3-ஐயே எடுத்திருக்கலாம் சி.எஸ். அமுதன்!.. ரத்தம் விமர்சனம் இதோ!..

 

Related Articles

Next Story