லைக்காவிடமிருந்து கமலுக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு!..அதிப்தியில் நம் உலக நாயகன்!..

நேற்று கோலாகலமாக கமலின் பிறந்த நாளை உலகெங்கிலும் இருக்கும் அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினர். கமல் மக்கள் நீதி மையம் கட்சி சார்பிலும் சில இலவச திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
சமூக வலைதளங்களிலும் பல நட்சத்திர பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் கமல் ஷீலா பேலேஸில் ஒரு பிறந்த நாள் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். குறிப்பாக அங்கு ஏன் வைத்தார் என்றால் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் அங்கு தான் தங்கியிருந்தாராம்.
இதையும் படிங்க : நண்பனுக்கு ஒன்னுனா சும்மா இருப்பேனா?..மாவீரனை காப்பாற்றிய லோகேஷ்!..
அவருக்காகவே அந்த ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்திருக்கிறார் கமல். ஆனால் மேல் தளத்தில் இருந்த சுபாஸ்கரன் பார்ட்டிக்கு வரவே இல்லையாம்.காரணம் நேற்று முன் தினம் வந்த அறிவிப்பு தான். கமல் மணிரத்னம் கூட்டணியில் ரெட் ஜெயண்ட் பேனரில் ஒரு புதிய படம் தயாராக இருக்கிறது என்ற அறிவிப்பினால் தான் சுபாஸ்கரன் அதிருப்தியில் இருக்கிறாராம்.
இந்த உச்சக்கட்ட கோபத்திற்கு பின் இருக்கும் காரணம் என்னவெனில் இந்தியன் - 2, சபாஷ் நாயுடு படத்திற்காக 200 கோடியும் பொன்னியின் செல்வன் படத்திற்காக 230 கோடியும் முதலீடு செய்தவர் சுபாஸ்கரன். அவரிடம் சொல்லாமல் இப்படி ஒரு அறிவிப்பு அதுவும் ரெட் ஜெயண்ட் பேனரில் வந்தது தான் அவருக்கும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்கள் கூட்டணியில் இருக்கும் திட்டம் தெரிந்திருந்தால் சுபாஸ்கரன் ரெட் ஜெயண்டிற்கு போக விட்டிருக்க மாட்டார். ஆகவே ஏதோ திட்டம் போட்டே நடந்திருக்கிறது என்ற ஆதங்கத்தில் நேற்றே லண்டன் புறப்பட்டு சென்று விட்டாராம் சுபாஸ்கரன்.
இதையும் படிங்க : என் வேலை ஈசியா போச்சு!.. நயன் surrogacy விஷயத்தால் பலனடைந்த சமந்தா!..என்னம்மா சொல்ற?..