Connect with us
banner

ஒரு ட்விட்…ஆண்டவரை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா..!

kamal_main_cine

Cinema News

ஒரு ட்விட்…ஆண்டவரை மன்னிப்பு கேட்க வைத்த சூர்யா..!

ஒட்டு மொத்த சினிமாவையும் பிரமிக்க வைத்துள்ளது கமல் நடிப்பில் உருவான ‘விக்ரம்’படம். படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் போன்றோரும் நடித்துள்ளனர்.

kamal1_cine

படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேவையான முக்கியத்துவத்தை இயக்குனர் கொடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக சஸ்பென்சாக வைத்திருந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சூர்யாவின் நடிப்பும் மிரள வைத்துள்ளது.

படம் வெளியானதில் இருந்து ஒரே திருவிழாக் கோலாமாக காட்சியளிக்கிறது. படத்தின் வெற்றியையும் படத்தால் தனக்கு கிடைத்த கௌரவத்தை பற்றியும் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கமலை டேக் செய்து பதிவிட்டிருந்தார். நீண்ட நாள் கனவு நடந்தேறியுள்ளது. வாய்ப்பளித்ததற்கு நன்றி என லோகேஷுக்கும் கமலுக்கும் நன்றியை தெரிவித்திருந்தார். கூடவே எப்படி சொல்றதுனு தெரியலனு ‘அண்ணா’ என்று கமலை அழைத்திருப்பார்.

kamal2_cine

இதற்கு பதில் கூறிய கமல்,” இதுவே காலதாமதமானது. ஏற்கெனவே நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தது. உங்களுக்கு கிடைத்த அந்த அன்பை பெருக்கிக் கொள்ளுங்கள், காலதாமதமானதுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி தம்பி சார் என்று சூர்யாவை கமல் அழைத்திருப்பார். இதற்கு முன் ஒரு மேடையில் பேசும் போது கமல், “ என் அண்ணன் பையன் தான் சூர்யா, ஆகவே சூர்யாவிற்கு நான் சித்தப்பா” என்று கூறியிருப்பார். ஆனால் இப்பொழுது சூர்யா அண்ணன் என்று கூப்பிட்டதற்கு கமலும் தம்பி சார் என்றே கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top