Connect with us

Cinema News

பாகுபலி, கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர்லாம் என்னங்க.. அதுக்கெல்லாம் மேல கமல் அப்பவே பண்ணிட்டாரு!.. அசுரன் ஜேகே பிரம்மிப்பு!..

1986ம் ஆண்டு வெளியான கமலின் பிரம்மாண்ட படமான விக்ரம் படத்தில் இருந்து ராஜ்கமல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் உதவி இயக்குநர் அசுரன் ஜேகே அந்த படத்தின் சுவாரஸ்யங்களையும், பிரம்மாண்டங்களையும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விரிவாக கூறியுள்ளார்.

அவர் சொல்வதை கேட்கும் போதே ஒருவித கூஸ்பம்ப்ஸ் தானாக வந்து தொற்றிக் கொள்கிறது.

பாகுபலி, கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் என பக்கத்து ஸ்டேட் சினிமாக்களை இப்போது பார்த்து வியக்கின்றனர். ஆனால், இதையெல்லாம் கமல் அப்பவே பண்ணிட்டாருங்க என அசால்ட்டாக கூறுகிறார்.

ஆப்டிக்கல் இலுஷன்களை மட்டுமே சினிமாவில் பயன்படுத்தி வந்த நிலையில், விக்ரம் படத்தில் பிரம்மாண்டமான சிஜி வொர்க்கை கொண்டு வந்ததே கமல் தான் என்கிறார் அவரது முன்னாள் உதவி இயக்குநர் அசுரன் ஜே.கே.

சாணிக் காயிதம் படத்தில் வில்லனாக வரும் அதே தாத்தா தான் இந்த அசுரன் ஜேகே என்பது மிரட்டலான தகவல்.

86லியே ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படம் விக்ரம். அதன் ஒரு சேஸிங் காட்சியில் ஜெய்ப்பூரில் பல இடங்களில் ஓடி திரிந்து கடைசியாக ஒரு மலைக்கு வந்து நிற்பார் கமல். அத்துடன் காட்சியை நிறுத்தாமல், இங்கே இருந்து இன்னொரு குட்டி மலைக்கு குதிப்பது போல ஷாட் எடுக்க முடியுமா? என கேமரா மேனிடம் கேட்க அனைவரும் ஆடிப் போய்விட்டனர்.

பாலிவுட்டிலேயே பிரபலமான கேமராமேனை வைத்து படம் எடுத்து வருகிறார் கமல், அவர் ஒரு நிமிடம் யோசித்து விட்டு பண்ணலாம் சார் என்கிறார். ஆனால், இரண்டு லாரி நிறைய எனக்கு அட்டைப் பெட்டி வேண்டும் எனக் கேட்க, கமல் அடுத்த நாளே அதை ஏற்பாடு செய்தார். இரவோடு இரவாக அட்டைப் பெட்டிகளை அந்த குட்டி மலையில், சூப்பர் சுப்புராயன் ஸ்டன்ட் இயக்குநரின் உதவி இயக்குநர்கள் அடுக்குகின்றனர். அதுவரை, பஞ்சு மெத்தைகளை போட்டுத் தான் உயரத்தில் இருந்து குதிக்கும் காட்சிகளை எடுத்து வந்தனர். அப்போது தான் முதன் முதலில் அட்டைப் பெட்டியில் குதிக்கும் ஷாட்டை படமாக்க ஆரம்பித்தனர் என்றார்.

அட்டைப் பெட்டிகளை பார்த்ததும் கமல் தானே குதித்து விடுகிறேன் என முற்பட, ரிஸ்க் எடுக்க வேண்டாம் என டூப் வைத்து அந்த காட்சியை படமாக்கினர். அதே போல கிளைமேக்ஸ் காட்சியில் வானத்தில் இருந்து அந்தரத்தில் தொங்கும் காட்சி, ஒரே ஷாட்டில் கத்தி வயிற்றில் குத்தி விட்டு வெளியே வரும் காட்சி என பல டெக்னிக்கலான ஷாட்களை அப்பவே எடுக்க காரணமாக இருந்தார் கமல் என அவரது உதவி இயக்குநர் பழைய விக்ரம் படத்தின் மேக்கிங் ரகசியங்களை சொல்ல சொல்ல தலையே சுற்றுகிறது.

மருதநாயகம் படம் எல்லாம் அவர் நினைத்தது போல உருவாகி இருந்தால் தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே பெருமையாக இருந்திருக்கும். பான் இந்தியா, பான் வேர்ல்ட் எல்லாம் எப்போதோ பரிசோதனை செய்து விட்டார் கமல் எனக் கூறியுள்ளார். 

 

google news
Continue Reading

More in Cinema News

To Top