கமலை துரத்தி துரத்தி காதலித்த நடிகை..! கடைசில அவங்க நிலைமை என்னாச்சுனு தெரியுமா..?

by Rohini |   ( Updated:2022-09-29 02:27:08  )
kamal_main_cine
X

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக இருக்கும் நடிகர் கமல்ஹாசன் இப்போது இருக்கும் நிலைமையில் இவர் தான் டிரெண்டிங்காகி வருகிறார். காரணம் இவர் நடித்த விக்ரம் படம் தான். இந்த அளவுக்கு ஒரு பெருமையை கொண்டு வந்து சேர்க்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.

kamal1_cine

இவரை பற்றிய ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.அதாவது அந்த காலங்களில் நிறைய நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் கமலுடன் இணைந்து நடிக்க பலபேர் பயந்து வந்த நடிகைகளில் திருமணம் என ஒன்று நடந்தால் அது கமலுடன் தான் என்று ஒரு நடிகை தீர்க்கமாக இருந்துள்ளார்.

kamal2_cine

அவர் வேறு யாருமில்லை. நடிகை ஸ்ரீவித்யா. இவர் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் பெரும்பாலான படங்களில் தன் வயதுக்கும் மீறிய குணச்சித்திர வேடங்களில் தான் நாம் அதிகமாக பார்த்திருப்போம். அபூர்வ ராகங்கள் படத்தில் கமலும் ஸ்ரீவித்யாவும் ஒன்றாக நடித்தனர். இருவரும் நன்றாக பரத கலை அறிந்தவர்கள், பாடகர்கள் என இருவருக்க்கும் எல்லாம் குணாதிசயங்களும் ஒன்றி போக அதில் கவரப்பட்டு ஸ்ரீவித்யா கமலை காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதையும் படிங்கள் : வயிறு குலுங்க சிரிக்க வைத்த கல்லூரி நாள்களை மறக்கவே முடியாது…கலகல விஷால்

kamal3_cine

தன் காதலின் ஆழம் தெரிந்து இதற்கு மேல் இருக்க முடியாது என நினைத்து இருந்த நிலையில் தான் கமல் வாணி கணபதி என்ற பெண்ணை காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இந்த துயரமான செய்தியில் இருந்து மீள முடியாமல் இருந்த ஸ்ரீவித்யாவுக்கு மலையாள பட உலகில் இருக்கும் ஒருவர் ஸ்ரீவித்யாவின் எல்லா விஷயங்களையும் அறிந்து அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு கூறியிருக்கிறார். இவரும் துக்கத்தில் இருந்ததால் சம்மதம் தெரிவிக்க இவருடன் நடித்த சக நடிகர், நடிகைகள் எல்லாம் அவசரப்படாதே என்று கூற அவசர அவசரமாக கல்யாணம் நடந்தது.

kamal4_cine

ஆனால் அந்த திருமணம் கொஞ்ச நாள்தான் நீடித்திருக்கிறது. ஸ்ரீவித்யா திருமணம் செய்து கொண்ட நபர் அவரின் சொத்தின் மேல் ஆசைப்பட்டு தான் இவரை கல்யாணம் செய்திருக்கிறார். இது தெரியவரும் நேரத்தில் ஸ்ரீவித்யா வீடும் இவரை விட்டு போய்விட்டது. கடைசியில் விவாகரத்து தான் முடிவு என்று முடிவு எடுத்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கு சினிமாவும் கைவிடவில்லை. தொடர்ந்து பல படங்களில் அம்மா, அக்கா என பல வேடங்களில் நடித்து வந்திருக்கிறார் ஸ்ரீவித்யா. இந்த தகவலை நடிகரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

Next Story