கமல் எனக்கு பண்ண துரோகத்த மறக்க முடியல....அதான் அப்படி செஞ்சேன்...பிரபல தயாரிப்பாளரின் மனக்குமுறல்...!
அண்மையில் ஐசரி வேலனின் 35ஆவது நினைவஞ்சலியை திரை உலகமே சேர்ந்து நினைவு கூர்ந்தது. அதற்காக ஐசரி கணேசன் ஒரு விழாவை ஏற்பாடு செய்தார். விழாவிற்கு கவுண்டமணி , பாக்யராஜ்,கமல் ஹாசன் உட்பட பலரும் கலந்து கொண்டு தங்கள் வணக்கங்களை தெரிவித்தனர். மேலும் அவரை பற்றி நினைவு கூர்ந்து வருகை புரிந்த பிரபலங்கள் பலரும் மேடையில் பேசினர். அப்போது தயாரிப்பாளர் கே.ராஜன் மேடைக்கு வரும்போது மேடையில் அமர்ந்திருந்த அத்தனை பேருக்கும் அருகில் வந்து வணக்கம் தெரிவித்தார்.
அருகில் கமலும் இருந்தார்.ஆனால் அவருக்கு மட்டும் மரியாதையை தெரிவிக்கவில்லை. இந்த செய்தி இணையத்தில் பெருமளவில் வைரலானது. இதை பற்றி கேட்கும் போது கே.ராஜன் “ ஏன் நான் அவரை கண்டுக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் “ அன்னைக்கு அவர் படமான ஹேராம் படத்திற்காக தான் என்னை அனுப்பி வைத்தார். எல்லாரும் திருட்டு விசிடி ல பார்க்கிறார்கள், அதை பற்றி எச்சரிக்கத்தான் நான் போனேன், நானும் போராட்டம் நடத்துகிறவர்களிடம் பேச, எல்லாரும் சேர்ந்து என்னை வெட்ட வந்தார்கள்.
போலீஸ் என்னை கிளம்பி விடுங்கள் என்று கூற நான் வந்துவிட்டேன், ஆனால் இவருக்காக போயி கடைசியில் என்னை யார் என்று கேட்டு விட்டார் கமல்” மேலும் ரஜினி போன் செய்து என் தைரியத்தை பாராட்டினார். அவருக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் அவர் என்னை பாராட்டினார்.சம்பந்தப்பட்டவர் யார் என கேட்கிறார். மேலும் ஒரு நிகழ்ச்சியில் அவரை பற்றி ஏதோ பேசிவிட்டேன் என்று அவரது ரசிகர்களுக்கு என் நம்பரை கொடுத்து மிரட்ட வைத்தார்.
நான் சைபர் கிரைமில் புகார் செய்து அதில் 3 பேரை மட்டும் கைது செய்தார்கள். அவர்கள் ஏழைகள், கமலின் ரசிகர்கள் தானே அவர்களையும் இவர் சேர்ந்த யாரும் ஜாமீனில் எடுக்க முன்வரவில்லை. போலீஸ் என்னிடம் வந்து அவர்களின் குடும்பங்கள் பாவம் கொஞ்சம் கருணை காட்டுங்கள் என்று கூறியதால் நான் புகாரை வாபஸ் பெற்றேன். இதை என்னால் இன்றளவும் மறக்க முடியவில்லை. ஆனால் வேண்டும் என்றே நான் மேடையில் அப்படி செய்யவில்லை. எனக்கு தோன்ற வில்லை அவ்ளோதான் என்று கூறினார்.