திரையுலகில் 50 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் ஒரு பன்முக கலைஞர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஹாலிவுட்டில் உள்ள புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வருபவர். கதை, திரைக்கதையில் பல புதிய மற்றும் பரிசோதனை முயற்சிகளை செய்தவர்.
ரஜினி போல மசாலா படம் கொடுத்து மார்க்கெட்டை தக்க வைக்க முடியும் என்றாலும், அதைவிட்டு விட்டு பல புதிய முயற்சிகளை செய்து நஷ்டத்தை சந்தித்தவர்.
இதையும் படிங்க : என்ன செல்லம் பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!…அதிரவிட்ட சிம்பு பட நடிகை…
பேசும் படம், நாயகன், மைக்கேல் மதன காமராஜன், குணா, மகாநதி, தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், விருமாண்டி, ஹே ராம், குருதிப்புனல், விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்கள் மூலம் புதிதாக சினிமாவுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். பல வருடங்களுக்கு பின் விக்ரம் என மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார்.
கமலும் மாதவனும் இணைந்து நடித்து வெளியான திரைப்படம்தான் அன்பே சிவம். இப்படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார். இப்படம் ஒரு ஃபீல் குட் திரைப்படம் என்றாலும் மசாலா சினிமாவை விரும்பும் சராசரி ரசிகர்களை இப்படம் கவரவில்லை. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கமல்ஹாசன் எழுதியிருந்தார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் அப்பட நிறுவனர் முரளிதரன் அளித்த பேட்டியில் ‘அன்பே சிவம் வசூல் ரீதியாக எங்களுக்கு தோல்விப்படம்தான். ஆனால், எங்களுக்கு கமல் செய்த உதவி யாருக்கும் தெரியாது. இப்படத்திற்காக கமல் பாதி சம்பளம் மட்டுமே வாங்கி கொண்டார். படம் வெற்றியடைந்தால் மீது சம்பளத்தை கொடுங்கள் என்றார். எந்த ஹீரோவும் அப்படி சொல்ல மாட்டார். ஆனால், கமல்ஹாசன் அப்படி சொன்னார்’ என பல வருட சீக்ரெட்டை பகிர்ந்தார்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…