More
Categories: Cinema News latest news

கமலின் செண்டிமெண்ட் இந்தப் படத்திலும் ஒர்க் அவுட் ஆகுமா? ‘அமரன்’ பேருக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா

Amaran Movie: நேற்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்தின் டீஸர் வெளியானது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் புரடக்‌ஷன் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் இசையில் படம் பெரிய அளவில் தயாராகிக் கொண்டிருக்கிறது.

டீஸர் வெளியானதில் இருந்து வழக்கம் போல் சர்ச்சைகளும் கிளம்பின. இந்தப் படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோவை அடிப்படையாக வைத்து எடுப்பதாக சில பேச்சுக்கள் வந்தன. அதை உண்மையாக்கும் விதத்தில் டீஸரில் கடைசியில் யுனிஃபார்மில் அந்த பேட்ஜில் முகுந்த் வி என்றே காட்டப்பட்டிருக்கும்.

Advertising
Advertising

இதையும் படிங்க: எத்தனை பேர் வந்தாலும் உன்ன போல வருமா!.. சலிக்காத அழகை காட்டி இழுக்கும் சமந்தா..

மேலும் சிவகார்த்திகேயன் ஒரு காட்சியில் கெட்ட வார்த்தையும் பயன்படுத்தியிருக்கிறார். இதை பார்த்தவர்கள் இது மேஜர் முகுந்தின் இமேஜை பாதிக்கும் அல்லவா என்றும் கூறி வருகிறார்கள். கெட்டவார்த்தை பேசினால்தான் கெத்தா? என்ற அடிப்படையில்தான் இப்போதுள்ள சினிமாவும் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

அதற்காக இந்தப் படத்தில் அதுவும் ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை சொல்லும் படத்திலும் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியிருக்க வேண்டாம் என்றே கூறிவருகிறார்கள். இந்த நிலையில் படத்திற்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அமரன் என்ற பெயருக்கும் படத்தின் கதைக்கும் அப்படி என்ன சம்பந்தம் என படம் பார்த்தால்தான் தெரியும்.

இதையும் படிங்க: அஜித் போட்ட விதை! ஓடோடி வந்து 1 கோடி கொடுத்த உதயநிதி – இதன் பின்னணி தெரியுமா உங்களுக்கு?

ஆனால் அமரன் என்ற பெயரில் ஏற்கனவே கார்த்திக் நடிப்பில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது.90கள் காலத்தில் வெளியான அந்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய ஃப்ளாப். ஒரு ஃப்ளாப் ஆன படத்தின் பெயரை எப்படி சிவகார்த்திகேயன் படத்திற்கு வைத்தார்கள் என தெரியவில்லை. இருந்தாலும் ராஜ்கமல் நிறுவனத்திற்கு இது ஒரு செண்டிமெண்டாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விக்ரம் என்ற தோல்விப் படத்தின் பெயரைத்தான் இப்போதும் வைத்து வெற்றியை கொடுத்தார்கள். அதே போல் அமரன் படத்தின் பெயரை பயன்படுத்தியிருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.எது எப்படியோ இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கேம் சேஞ்சர் படமாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: விஜயுடன் தொடர்ந்து நடித்த சதீஷ் அஜித் கூட நடிக்காமல் போன காரணம்? வந்த வாய்ப்பும் போச்சே

Published by
Rohini

Recent Posts