நான் முடிச்சுட்டேன்..இப்ப நீங்க ஆரம்பிங்க...ரசிகர்களுக்கு சவால் விட்ட ஆண்டவர்...(வீடியோ)
கமலின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்தது ‘விக்ரம்’ படம். இதுவரைக்கும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வரும் விக்ரம் படம் பிரபலங்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் படத்தில் நடித்த பிரபலங்களும் தங்களுக்குள்ளாகவே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
லோகேஷ் படமாக முழுக்க முழுக்க இருப்பதால் ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். படத்தில் லோகேஷ், கமல், அனிருத் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர்களைதான் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
எப்படி இருந்தாலும் ஒரு ஃபேன் பாயாக லோகேஷ் ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளார் என்பதில் ஐயமில்லை. மேலும் 4 வருடங்கள் கழித்து கமல் நடிப்பதால் அவரும் அவரின் திறமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலைமையில் கமல் தனது இன்ஸ்டாவில் பத்தல பத்தல பாடலில் வரும் முதல் சரணமான “ சக் சக்கும்” என்பதை ரசிகர்களிடம் பாடி காண்பித்து இது உங்களுக்கான ஒரு வாய்ப்பு. நீங்கள் இதை பயன்படுத்தி இந்த சரணத்தை நீங்கள் பாட நான் கேட்க போகிறேன். பாடலாகவோ, ரீல்ஸ் எடுத்தோ உங்க பாடலாக ஆக்கி கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். ஒரு வேளை இது ரசிகர்களுக்கான சவாலாக கூட இருக்கலாம். இதன் மூலம் கமலை சந்திக்க கூடிய வாய்ப்பாகவும் அமையலாம் என தெரிந்த வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ : https://www.instagram.com/reel/CeVlyN9gLxx/?utm_source=ig_web_copy_link