எல்லா கோட்டையும் அழி!.. கடைசி நேரத்தில் கதையை மாற்றிய கமல்!.. மாட்டிக்கிட்டு முழிக்கும் ஹெச்.வினோத்!...

by சிவா |
எல்லா கோட்டையும் அழி!.. கடைசி நேரத்தில் கதையை மாற்றிய கமல்!.. மாட்டிக்கிட்டு முழிக்கும் ஹெச்.வினோத்!...
X

சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் இயக்குனராக மாறியவர் ஹெச்.வினோத். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். ஒளிப்பதிவாளர் நடராஜ் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மல்டிலெவல் மார்கெட்டிங், ரைஸ் புல்லிங், ஈமு கோழி, மண்ணுளி பாம்பு என பலரும் ஏமாந்த மோசடி சம்பவங்களை அழகாக திரைக்கதை அமைத்திருந்தார்.

அதன்பின் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கினார். அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். விக்ரம் திரைப்படத்திற்கு பின் கமல் நடிக்கும் படம் இது. இப்படத்திற்கான கதையை கடந்த சில மாதங்களாகவே ஹெச்.வினோத் உருவாக்கி வருகிறார். தமிழகத்தில் காணாமல் போன பாரம்பரிய நெல் விதைகளுக்கு பின்னாடி உள்ள அரசியலை அடிப்படையாக வைத்து இக்கதையை அவர் உருவாக்கியிருப்பதாக செய்திகள் வெளியானது.

vinoth

அதை நிரூபிக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்பு நெல் ஜெயராமன் இயக்கத்தை சேர்ந்த சேர்ந்த பிரதிநிதிகளை நேரில் வரவழைத்து கமல் பேசினார். அந்த சந்திப்பில் ஹெச்.வினோத்தும் இருந்தார்.

இதையும் படிங்க: இந்த பொம்பளைய லேசா நினைச்சிராதீங்க? வடிவுக்கரசி பற்றி கமல் சொன்ன சீக்ரெட்!…

இந்நிலையில், திடீரென ஹெச்.வினோத்தை அழைத்த கமல் ஏற்கனவே அவர் ஊருவாக்கி வைத்திருந்த ‘தலைவன் இருக்கின்றான்’ பட கதையை அவரின் கையில் கொடுத்து இதையே படமாக எடுப்போம் எனக்கூறிவிட்டாராம். எனவே, தற்போது அந்த கதையை டெவலப் செய்யும் வேலையில் ஹெச்.வினோத் ஈட்டுபட்டுள்ளார்.

H.Vinoth

H.Vinoth

பொதுவாகவே கமல்ஹாசன் இயக்குனர் கூறும் கதையில் தலையிட்டு அந்த கதையையே மாற்றிவிடும் பழக்கம் கொண்டவர். விக்ரம் படத்திற்கு கூட பல கரெக்‌ஷனை சொன்னார். ஆனாலும் அது படம் சிறப்பாக வரம் வேண்டும் என்பதற்காகத்தான். சில நேரம் அதுவே நெகட்டிவாகவும் அமைந்துவிடும்.

ஹெச்.வினோத்திற்கு என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: மக்களின் குரலில் உருவான எம்.ஜி.ஆரின் பாடல்.. அது என்ன தெரியுமா..?

Next Story