More
Categories: Cinema News latest news

எப்பா இது வேற லெவல் காம்போவால இருக்கு!.. கமலுக்கு ஜோடியாக அஜித் பட நடிகை?..

தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல். தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். தென்னாப்பிரிக்காவில் படப்பிடிப்பை முடித்து விட்டு ஷங்கர் சென்னைக்கு திரும்ப கமல் மட்டும் வரும் வழியில் துபாயில் இரண்டு நாள்கள் தங்கி பின்னர் சென்னைக்கு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு தன்னுடைய 234 வது படத்தை மணிரத்னம் இயக்க கமல் அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கெனவே கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் நயன் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

Advertising
Advertising

ஏற்கெனவே விக்னேஷ் சிவன் ராஜ்கமல் புரடக்‌ஷனில் பிரதீப் ரெங்கநாதனை வைத்து ஒரு படம் இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதை வைத்து தான் கமலுக்கு ஜோடியாக நயன் கண்டிப்பாக நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் தான் நயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

கமலை வைத்து எடுக்கப்போகும் படத்தின் கதையை மணிரத்னம் ஏற்கெனவே எழுதி முடித்து விட்டாராம். அடுத்ததாக நயனுக்காக கதையை எழுதப் போகிறாராம். இப்படி இருக்க கமலுக்கு ஜோடியாக யார் தான் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்து வந்தது.
மணிரத்னம் இயக்க போகும் அந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே வித்யாபாலன் அஜித்திற்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் தமிழில் நடித்தார். அதனை அடுத்து ந்தப் படத்தில் தான் கமலுக்கு ஜோடியாகிறார் வித்யா பாலன். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.

இதையும் படிங்க : யாருக்காகவும் சிபாரிசு செய்யாத அஜித்!.. இவருக்கு மட்டும் ஏன்?.. விக்னேஷ்சிவன் சொன்ன சுவாரஸ்யதகவல்!..

Published by
Rohini

Recent Posts