Categories: Cinema History Cinema News latest news

சண்டையில எதுக்கு சேனைக்கிழங்கு? ஊருல உன்னப் பத்தி 16 விதமா பேசறான்… கமல் அடித்த செம காமெடி

கமல்  – கிரேசி மோகன் கூட்டணியில் படம் என்றால் காமெடிக்குப் பஞ்சமே இருக்காது. அத்தனை காமெடிகளும் வெடிச்சிரிப்பாகத் தான் இருக்கும். நின்று யோசிக்கக்கூட நேரம் இருக்காது. டப் டப்புன்னு காமெடிகள் வார்த்தைகளில் பட்டாசாய் தெறித்துக் கொண்டு இருக்கும். சதிலீலாவதி, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பஞ்சதந்திரம், தெனாலி, காதலா காதலா, பம்மல் கே.சம்பந்தம், அவ்வை சண்முகி என பல படங்களில் வசனம் எழுதியவர் கிரேசி மோகன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இருவரும் நெருங்கிய நண்பர்கள். கடந்த ஆண்டு கிரேசிமோகனின் பிறந்தநாள் விழாவில் கமல் கலந்து கொண்டு பேசும்போது அவரது வார்த்தைகளில் காமெடி அட்டகாசமாய் ரசிக்க வைத்தது. அதிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

இதையும் படிங்க… அண்ணாமலை படத்திற்கு மாஸ் பிஜிஎம்… தேவாவை திட்டிய ரஜினி ரசிகர்கள்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

இயக்குனர் மௌலி நாடகங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. ஒரு நாடகத்துல “ஊருல 16 விதமா பேசுறான் உன்னைப் பத்தி”ன்னு ஒரு டயலாக் வரும். “அதென்ன 16?”  “நாலுபேரு நாலு விதமா பேசறான்… நாலு நான்கு பதினாறு” ன்னு அதுக்கு விளக்கம் வரும். அப்படி ஒரு ஹியூமர் அவரோட காமெடியில உண்டு

பத்மவியூகம்கற டிராமாவுல “அபிமன்யுவ சுத்தி சேனையை வைச்சிட்டான்…னு சொல்வாங்க. சண்டையில எதுக்கு சேனைக் கிழங்குன்னு எனக்கு சந்தேகம்… டேய் அறிவு கெட்டவனே படை படை”ன்னு சொன்னார். ரெண்டும் அரிக்கும். சொல்லுங்கன்னு சொல்ற மாதிரி சீன் வரும்.

இதையும் படிங்க… முதல்ல மத்தவங்களை மதிக்க கத்துக்கோ.. அப்புறம் நீ டைரக்ட் பண்ணு!.. ஷங்கரை திட்டும் பிரபலம்!..

மௌலிக்கு நிஜமாகவே பாராட்டு வைக்கிறது ஷீல்டு எல்லாம் கொடுக்கறது இல்ல. இதை திருப்பி சொல்றேன் பாருங்க. அது தான் நிஜமாகவே நான் வைக்கிற பாராட்டு விழா.

மௌலி இன்னொரு பாலசந்தர் ஆகக்கூடியவர். அதை பாலசந்தரே நம்பினார். தன் படத்திலேயே ஒரு பகுதியை மௌலியைத் தான் நம்பி எழுதக் கொடுப்பாராம். அதற்குப் பிறகு ஒரு சீனை நீ எடுத்துருன்னு நம்பி கொடுத்தது எங்கிட்ட தான்… அந்த வழி வந்தவர்கள் தான் நாங்கள். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v