மாமன்னன் படம் பார்த்து கமல் சொன்னது இதுதான்!. மாரி செல்வராஜ் பகிர்ந்த சீக்ரெட்...

கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் மாரி செல்வராஜ் கமலின் முன்னிலையில் நடந்து கொண்ட விதம் மற்றும் அவர் இயக்கி சமீபத்தில் வெளியான மாமன்னன் படம் பற்றித்தான்.
‘தேவர் மகன் படத்தை பார்த்துவிட்டு நான் பல வருடங்கள் தூங்கவில்லை. அது என்னை மிகவும் பாதித்தது. அப்படத்தில் இடம்பெற்ற இசக்கி கதாபாத்திரம் என் அப்பாவாக இருந்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். அந்த கதாபாத்திரத்தின் நீட்சிதான் மாமன்னன்’ என பேச கடுப்பான கமல் ரசிகர்கள் மாரி செல்வராஜை பல நாட்கள் ட்ரோல் செய்தனர்.

Mari Selvaraj
தேவர் மகன் படத்தில் கமல் என்ன சொல்லியிருக்கிறார் என்பது புரியாமலேயே மாரி செல்வராஜ் உளறி வருகிறார். அந்த படத்தில் இடம் பெற்ற இசக்கி கதாபாத்திரமும் தேவர்தான். ஒரு ஜாதிக்குள் இருக்கும் பங்காளிகளுக்கு இடையேயான மோதல்தான் அப்படம். வன்முறை கூடாது என்பதைத்தான் கமல் அப்படத்தில் சொல்லியிருக்கிறார் என பலரும் பதிவிட்டனர்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ் ‘மாமன்னன் படத்தை கமல் சாருக்கு போட்டு காட்டினேன். இடைவேளை கூட இல்லாமல் முழுபடத்தையும் பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு ‘எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தலைவன் இருக்கிறான் என்கிற படத்தில் வடிவேலுவை இப்படி காட்டலாம் என நினைத்திருந்தேன். ஆனால், நீங்கள் அதை செய்து விட்டீர்கள். வடிவேலுவை வேறு மாதிரி பயன்படுத்த நினைத்தேன். உங்களுக்கு அது தோன்றியிருக்கிறது’ என சொன்னார். அதுவே அவரிடமிருந்து எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு’ என மாரி செல்வராஜ் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: ரஜினி மட்டும்தான் நடிகரா?!. நாங்களாம் படம் எடுக்கலயா?!.. நடிகை விஷயத்தில் கடுப்பான விசு…