More
Categories: Cinema News latest news

அந்த படத்திலிருந்து சுட்டு க்ளைமேக்ஸ் வைத்த கமல்….30 வருடம் கழித்து வெளிவந்த உண்மை…

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பின் சிறந்த நடிகர் என பெயர் எடுத்தவர் கமல்ஹாசன். பல திரைப்படங்களில் கமல்ஹாசன் தனித்துவமான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அப்படி அவர் 4 வேடங்களில் நடித்த திரைப்படம்தான் மைக்கேல் மதன காமராஜன்.

சிங்கீதம் சீனிவாசராஜ் இயக்கிய இந்த திரைப்படம் 1991ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்தது. இப்படத்தில் 4 வேடங்களில் வெவ்வேறு பரிமாணங்களை தனது நடிப்பில் காட்டியிருப்பார் கமல்.

Advertising
Advertising

இப்படத்தின் இறுதியில் ஒரு மலை உச்சியில் உள்ள வீட்டில் 4 கமல், அவரின் தாய், தந்தை, வில்லன், வில்லனின் மகன் மற்றும் அடியாட்கள் என படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் அந்த வீட்டில் இருப்பார்கள். படிக்கெட் உடைந்துவிட்டதால் கயிறு போட்டு கீழே இறங்க வேண்டும்.

எடை தாங்காமல் அந்த வீடு இந்த பக்கமும் அந்த பக்கமும் தள்ளாடிக்கொண்டே இருக்கும். ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கும் காட்சி அது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அந்த வீட்டிலிருந்து ஒருவரின் பின் ஒருவராக கீழே இறங்குவதுதான் க்ளைமேக்ஸ் காட்சி.

இந்நிலையில், இந்த க்ளைமேக்ஸ் காட்சியை கமல்ஹாசன் சார்லி சாப்ளின் படத்தில் இருந்து சுட்டிருப்பது இப்போது தெரியவந்துள்ளது. சார்லி சாப்ளின் இயக்கத்தில் 1925ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘The Gold Rush 1925’. இப்படத்திலும் இதே போல ஒரு காட்சி வருகிறது.

ஆனால், அந்த வீட்டில் 2 பேர் மட்டுமே இருப்பார்கள். சார்லி சாப்ளினும் அவரும் இந்த பக்கமும் அந்த பக்கமும் தள்ளாடுவர்கள். பின் ஒருவழியாக வீட்டிலிருந்து கீழே குதிப்பார்கள்.

66 வருடம் கழித்து அதை சுட்டு மைக்கேல் மதன காமராஜன் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியாக வைத்துள்ளனர் என்பது 30 வருடம் கழித்து தற்போது தெரியவந்துள்ளது.

Published by
சிவா

Recent Posts