சென்னைக் காளையர்கள் தயாராகிக்கோங்க!.. யாருக்காவது தோணுச்சா?.. அதுதான் கமல்!.. எங்கேனு தெரியுமா?..

kamal
தமிழ் சினிமாவில் ஒரு தனித்துவமான நடிகராக விளங்கி வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன். எதிலும் கொஞ்சம் வித்தியாசத்தை புகுத்த நினைப்பவர் தான் கமல். இது இப்பொழுது ஆரம்பித்த செயல் இல்லை, அவர் நடிக்க ஆரம்பமானதில் இருந்தே அவர் மனதில் தோன்றிய எண்ணம் இதுதான்.
புதுபுது அணுகுமுறைகள், புதிய தொழில் நுட்ப முறைகள் என தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு போக எந்த உயரம் வேண்டுமானாலும் செல்லக் கூடியவர் கமல். சரி சினிமாத்துறையில் தான் இப்படி இருக்கிறார் என்றால் பொது வாழ்க்கையிலும் இதே முறையை தான் பின்பற்றுகிறார்.

kamal1
அதாவது பொங்கல் தினத்தில் தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டான ‘ஜல்லிக்கட்டு’ தமிழகம் முழுவதும் இருக்கும் இளைஞர்களுக்கே உரிய விளையாட்டாகும். இந்த விளையாட்டிற்கு மிகவும் பிரபலமான ஊரான அலங்காநல்லுரில் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களும் ஒன்று கூடி தன் வீரத்தை வெளிக்காட்ட ஆர்வமாக இருப்பார்கள்.
இதையும் படிங்க : எம்ஜிஆருக்காக கலைஞரையே எதிர்த்த சிவாஜி!.. நட்புக்கு உதாரணமாக இருந்த ஒரு நிகழ்வு!..
அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டு விளையாட்டை சென்னையிலும் நடத்தலாம் என்ற யோசனையை முன்வைத்து கையில் எடுத்துள்ளார் கமல். அதுவும் கிராம மக்களே கண்டு களித்த அந்த வீரவிளையாட்டை நகர மக்களும் சேர்ந்து கண்டுகளிக்க ஆசைப்படுகிறார். இதுவரை இந்த யோசனையை யாரும் கூறவில்லை.

kamal2
அரசும் அப்படி ஒரு திட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானாலும் கமல் அவரது முயற்சியில் சொந்தமாக நடத்த திட்டமிட்டுள்ளாராம். அதுவும் சென்னையிலுள்ள படப்பை ஏரியாவில் ஒரு பெரிய ஏக்கர் அளவு நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளாராம் கமல். விரைவில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சென்னையிலும் கண்டுகளிக்கலாம் என்று தெரிகிறது.