kamal
அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகராக மாறி சூப்பர்ஸ்டாராகவும் மாறியவர் ரஜினிகாந்த். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, பின் வில்லனாக மாறி ஒருகட்டத்தில் ஹீரோவாக மாறியவர். அதேபோல், ஐந்து வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின் ரஜினியும், அவரும் இணைந்து சில படங்களில் நடித்தனர்.
ரஜினி, கமல் இருவரையுமே வைத்து பல படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் ரஜினி, கமல் என இருவரையும் வைத்து ஒரு படத்தை எடுக்க முடிவெடுத்தது. எனவே, எஸ்.பி.முத்துராமனை அழைத்து பேசியது. அதன்பின் எஸ்.பி.முத்துராமன் ரஜினியை சந்தித்து இதுபற்றி கூறியபோது ‘சினிமாவில் வாய்ப்பு தேடும் போது இந்த நிறுவனத்துக்குள்ளே செல்ல முடியுமா? என சாலையில் ஏக்கமாக நின்று ஏவிஎம் உருண்டையை வேடிக்கை பார்த்திருக்கிறேன். இதைவிட எனக்கு என்ன வேண்டும்!’ என மகிழ்ச்சியுடன் ரஜினி ஒப்புக்கொண்டார்.
அடுத்து கமலை சந்தித்து பேசியுள்ளார். ஆனால், கமல் முகத்தில் ஒரு தயக்கம் இருந்தது. எனவே, ஏன் கமல்?..என்ன தயக்கம்? என எஸ்.பி.முத்துராமன் கேட்க ‘ஏவிஎம் படத்தில் நடிப்பது மகிழ்ச்சிதான். ஆனால், இனிமேல் நானும், ரஜினியும் இணைந்து படம் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். அவருக்கு என ஒரு ஸ்டைல். எனக்கென தனி பாணி இருக்கிறது. நான் ஏவிஎம் நிறுனத்திற்கு தனியாக கால்ஷீட் கொடுக்கிறேன்’ என சொல்லிவிட்டார். இந்த தகவல் ஏவிஎம் நிறுவனத்திற்கு சொல்லப்பட ரஜினியை வைத்து ‘முரட்டுக்காளை’ படம் துவங்கப்பட்டது. அதன்பின் எவிஎம் நிறுவனத்திற்காக கமல் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் நடித்து கொடுத்தார்.
இந்த தகவலை எஸ்.பி.முத்துராமன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹீரோ சான்ஸ் கொடுக்க தயாராக இருந்த இயக்குனர்!.. நகைச்சுவையை தேர்ந்தெடுத்த நடிகர்!.. வித்தியாசமா இருக்காரே?..
ஐயா திரைப்படம்…
நடிகர் அஜித்துக்கு…
ஜனநாயகன் படம்…
தமிழ் சினிமாவில்…
பொல்லாதவன் படம்…