Connect with us

Cinema News

விருமாண்டி-2 டிராப்.!? கமல் எடுத்த அதிரடி முடிவு.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!

சில தினங்களுக்கு முன்னர் சினிமா ரசிகர்களை அதிர்ச்சி மற்றும் ஆச்சர்யமூட்டிய தகவல் என்றால் அது கமல்ஹாசன் நடிப்பில் ‘கொம்பன்’ முத்தையா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகிறது. என்று தான். ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தாலும் இன்னோர் பக்கம் கமல் நீண்ட வருடங்கள் கழித்து ஒரு கிராமத்து படம் நடிக்கிறார் என்று ஆச்சர்யப்பட்டார்.

இப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக உள்ளதாக கூறப்பட்டது. விருமாண்டி படம் போல ஆக்சன் படமாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.  ரசிகர்கள் கமல் விருமாண்டி 2 எடுக்க ஆரம்பித்துவிட்டார் என கூற ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படியுங்களேன் – என் தம்பி எதுக்கும் லாயக்கில்லை.! பொது வெளியில் மானத்தை வாங்கிய மாநாடு இயக்குனர்.!

தற்போது அப்படம் பற்றிய ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கமல் கதை கேட்டது உண்மை தான். ஆனால், அதில் கமல் நடிக்கவில்லை. கமல் அப்படத்தை தயாரிக்க மட்டும் செய்கிறாராம்.

இப்படத்தில் ஆர்யா தான் நாயகனாக நடிக்க உள்ளாராம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. கமல் தனது படத்தை தாண்டி, சிவகார்த்திகேயன், ஆர்யா என அடுத்தடுத்து இளம் ஹீரோ படஙக்ளை தயாரிக்கவும் ஆர்வமாக இயங்கி வருகிறாராம்,

google news
Continue Reading

More in Cinema News

To Top