பெங்களூரில் இருந்து பறந்து வந்த ரஜினி.. கூப்பிடும் தூரத்தில் இருந்தும் வராத கமல்.. மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?..
தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக அனைவரையும் சிரிக்க வைத்ததில் நடிகர் மயில்சாமியும் ஒருவர். ஒரு மிமிக்ரி கலைஞராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த மயில்சாமி மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். ஆனாலும் வடிவேல் , விவேக் அளவிற்கு ஒரு முன்னனி நகைச்சுவை நடிகராக அவரால் ஜொலிக்க முடியவில்லை.
தீவிர எம்ஜிஆர் ரசிகராக எப்பொழுதும் எம்ஜிஆரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர். மேலும் திரையுலகில் உள்ள அனைத்து ஹீரோக்களுடனுன் நடித்தவர். அதீத சிவபக்தராக இருந்த மயில்சாமி சிவராத்திரி நாளில் இந்த உலகை விட்டு மறைந்தார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார். மயில்சாமி இறந்த தினத்தில் ரஜினி அவரது சகோதரர் வீடு இருக்கும் பெங்களூரில் இருந்திருக்கிறார். மயில்சாமியின் இறந்த செய்தி கேட்டு உடனடியாக புறப்பட்டு சென்னை வந்தடைந்தார்.
ஆனால் மயில்சாமியின் வீட்டருகே இருக்கும் பிரசாத் ஸ்டூடியோவில் தான் கமலின் இந்தியன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம். ஆனாலும் கமல் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. மேலும் நேற்று இந்தியன் படப்பிடிப்பு நடக்கவே இல்லையாம். ஏனெனில் நேற்றைய நாளில் தான் மூன்று வருடத்திற்கு முன்பு இந்தியன் 2 படப்பிடிப்பில் ஒரு விபத்து நடந்தது.
அந்த நாளை நினைவு படுத்தும் விதமாக சங்கர் நேற்று படப்பிடிப்பு வேண்டாம் என சொல்லிவிட்டாராம். சரி அப்போதாவது கமல் மயில்சாமியின் இறுதி அஞ்சலிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரச்சாரத்திற்கு சென்று விட்டாராம். முக்கியமாக மயில்சாமியின் சினிமா கெரியரில் கமலுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு . ஆனாலும் கமல் வராதது அனைவர் மத்தியில் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார்.